தொழில் தொடங்க நிதியுதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் தொடங்க நிதியுதவி

Added : செப் 08, 2021
Share
ராமநாதபுரம் : மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர்நலத்துறை சார்பாக பட்டதாரிகள் தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுகிறது.ஆதிதிராவிடர் சட்டம்படித்த பட்டதாரிகள் சொந்தமாக தொழில் துவங்க அலுவலகம், மேஜை, நாற்காலி வாங்குவதற்கு மத்திய அரசின் சிறப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி புதிதாக தொழில் தொடங்க ரூ.50ஆயிரம் மானியம் பெறலாம். 21 முதல் 45 வயதிற்குள் இருக்க

ராமநாதபுரம் : மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர்நலத்துறை சார்பாக பட்டதாரிகள் தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் சட்டம்படித்த பட்டதாரிகள் சொந்தமாக தொழில் துவங்க அலுவலகம், மேஜை, நாற்காலி வாங்குவதற்கு மத்திய அரசின் சிறப்பு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி புதிதாக தொழில் தொடங்க ரூ.50ஆயிரம் மானியம் பெறலாம். 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 3 அல்லது 5 ஆண்டுகால சட்ட படிப்பு முடித்து மத்திய, மாநில பார் கவுன்சில் உறுப்பினராக வேண்டும். தகுதியுடைய நபர்கள் ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை செப்., 14க்குள் பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X