சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை மடியில் மீன்பிடிப்பு; இரு படகுகள் பறிமுதல்

Added : செப் 08, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த இரு விசைப்படகை மீன்துறையினர் பறிமுதல் செய்தனர்.கடல், மீன் வளத்தை அழிக்க கூடிய இரட்டைமடி, சுருக்குமடியில் பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம்,மண்டபம் பகுதியில் இரட்டைமடியில் மீன்பிடித்த 5 படகை மீன்துறையினர் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் செப்.,6ல்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த இரு விசைப்படகை மீன்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடல், மீன் வளத்தை அழிக்க கூடிய இரட்டைமடி, சுருக்குமடியில் பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம்,மண்டபம் பகுதியில் இரட்டைமடியில் மீன்பிடித்த 5 படகை மீன்துறையினர் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் செப்.,6ல் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகில் பாஸ்கரன், ஆரோக்கியசெல்வம் ஆகியோரது படகில் இரட்டைமடியில் மீன்பிடிப்பதாக தகவல் வந்தது. மண்டபம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல்காதர் ஜெயிலானி, மீன்துறையினர் இரு படகையும் பிடித்து மீன்கள், வலைகளை பறிமுதல் செய்தனர். இப்படகிற்கு மானிய டீசல், மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X