பொது செய்தி

தமிழ்நாடு

கல்வித்துறைகள் ஒருங்கிணைந்துஇயங்க தனிக் கட்டடம் வேண்டும்: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

Added : செப் 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் தனித்தனியாக செயல்படும் கல்வித்துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், கட்டடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகேசன் கூறியதாவது:முதன்மை கல்வி அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக அரண்மனை பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி

ராமநாதபுரம் : மாவட்டத்தில் தனித்தனியாக செயல்படும் கல்வித்துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், கட்டடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகேசன் கூறியதாவது:முதன்மை கல்வி அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக அரண்மனை பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. தற்போது பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது. இங்கு சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு ஆவணங்கள் எரிந்தன.

ஓம்சக்தி நகரில்மண்டபம் கல்வி மாவட்ட அலுவலகம், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகம்பழைய கலெக்டர் அலுவலக வளாகம், அதேபோல ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஐ., போன்ற திட்ட அலுவலகங்களும் நெருக்கடியில் இயங்குகிறது.ஜே.ஆர்.சி., பசுமைப்படை, சுற்றுசூழல் மன்றம்,சாலை பாதுகாப்பு மன்றம் போன்ற அமைப்புகளும் உள்ளன. மாவட்ட தேர்வுதுறை அலுவலகம் புது கலெக்டர் அலுவலககட்டடத்தில் உள்ளது.

ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்க கட்டட வசதி இல்லாததால் தனியார் பள்ளிகளில் நடத்துகின்றனர்.பத்து, பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளை மதிப்பீட செய்ய தனியாக அரசு கட்டட வசதியில்லை. ஆகையால் ராமநாதபுரம் கல்வித்துறைக்கென ஒருங்கிணைந்த கூட்ட அரங்கம், கட்டட வசதிகளை அரசு செய்துதர வேண்டும்,'.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X