அரசியல் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியிலும் 71 ஆயிரம் டன் நிலக்கரி மாயம்: செந்தில் பாலாஜி

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை: வடசென்னையில் 2.38 டன் நிலக்கரி மாயமான நிலையில், தூத்துக்குடியிலும் 71 ஆயிரத்து 857 டன் நிலக்கரி காணவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு பின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிலுரை: இந்திய மரபு சாரா எரிசக்தி நிறுவனத்துடன், 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
Coal, Senthil Balaji, Minister, அமைச்சர், செந்தில் பாலாஜி, நிலக்கரி,தூத்துக்குடி, மாயம்

சென்னை: வடசென்னையில் 2.38 டன் நிலக்கரி மாயமான நிலையில், தூத்துக்குடியிலும் 71 ஆயிரத்து 857 டன் நிலக்கரி காணவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு பின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிலுரை: இந்திய மரபு சாரா எரிசக்தி நிறுவனத்துடன், 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 20 ஆயிரம் மெகாவாட் சோலார் மின்சாரம்; 3,000 மெகாவாட் நீரேற்று மின்சாரம்; 2,000 மெகாவாட் எரிவாயு மின்சாரம் தயாரிக்கப்படும். மின்வாரியத்தின் மொத்த கடன், 1.52 லட்சம் கோடி ரூபாய். இது, தமிழக அரசின் கடனில் மூன்றில் ஒருபங்கு. இதற்காக ஆண்டுதோறும், 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டப்படுகிறது.

வட்டி விகிதம் 9.50 சதவீதம் துவங்கி 13.5 சதவீதமாக உள்ளது. அதிக வட்டி கொடுத்து கடன் பெறவேண்டிய அவசியம் இல்லை. மக்களிடம் இருந்து வரக்கூடிய வருவாயை வைத்து, மின்வாரியத்தை மேம்படுத்த முடியும். நிர்வாகத்தை சீர் செய்யாமல் விட்டதால் மின்வாரியம் இழப்பை சந்தித்துள்ளது. வடசென்னை மின் நிலையத்தில் ஆய்வு செய்த போது, 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. இதற்காக இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்ததாக முன்னாள் அமைச்சர் கூறினார்.


latest tamil news


ஆனால், தேர்தல் முடிவு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு எந்த ஆய்வுக்கும் செல்லவில்லை. தற்போது, குழு அமைக்கப்பட்டு நடந்த முதற்கட்ட ஆய்வில், வடசென்னையில் 2.38 டன்; துாத்துக்குடியில் 71 ஆயிரத்து, 857 டன் நிலக்கரி காணவில்லை என தெரிய வந்துள்ளது. ஆய்வுக்குழுவின் இறுதி அறிக்கை வந்தபின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
08-செப்-202118:07:48 IST Report Abuse
Enrum anbudan அங்கு அதிகாரிகளே இல்லையா, காணும்னு சொல்றதுக்கு நீ எதுக்கு அமைச்சரா இருக்க அதை கண்டு பிடித்து தண்டிக்க வக்கு இல்ல வந்துட்டான் காணும்னு சொல்ல. நீ திருடுறதுக்கு முன்னாடி திருடன் திருடன்னு கத்துற கணக்கா இல்ல இருக்கு. அங்க உள்ள திருட்டு அதிகாரிகளை பிடிச்சு உலுக்கு எல்ல்லா உண்மையும் தானா வெளிய வரும் அதை விட்டு விட்டு நிலக்கரி தான நடந்து போனமாதிரி அறிக்கை விடுற நீயெல்லாம் ஒரு அமைச்சர் ....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-செப்-202117:09:20 IST Report Abuse
M  Ramachandran உங்க ஆளுங்களெல்லாம் தாது மணலய் கேஆரெலா வழியாக யேற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள் அது ஊன்கள் காணில் படவில்லைய. அண்ணே நீங்களெ கரூரில் மணலல் அள்ளும்கொள்ளும்படி படி வெற்றிபெற்றவுடன் அள்ளி கொள்ளுமாறு வீர வசனம் பேசினீர்கள். அது எல்லாம் என்னாச்சி
Rate this:
Cancel
08-செப்-202116:56:00 IST Report Abuse
தமிழ்கிறுக்கன் அவங்க ஆட்சில மின்வெட்டு இல்ல, இவங்க ஆட்சில தாராளமா இருக்கு. பிச்ச போட்டவனுக இதுக்கும் முட்டு குடுப்பானுக. இது தான் தமிழகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X