பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' துணிச்சல் அசாத்தியமானது; புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பாராட்டு

Added : செப் 08, 2021
Share
Advertisement
கோவை;'துணிச்சல்மிக்க நாளிதழ், 'தினமலர்' மட்டுமே' என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கடந்த, 1951, செப்., 6ல் துவங்கி, 71வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்துக்கள்.ஜனநாயகத்தின் முக்கிய அம்சமே பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை. கருத்துரிமையை நிலை நாட்டுவது பத்திரிகைகள். ஒரு நாளிதழை, இடைவிடாமல், 70

கோவை;'துணிச்சல்மிக்க நாளிதழ், 'தினமலர்' மட்டுமே' என, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கடந்த, 1951, செப்., 6ல் துவங்கி, 71வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்துக்கள்.

ஜனநாயகத்தின் முக்கிய அம்சமே பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை. கருத்துரிமையை நிலை நாட்டுவது பத்திரிகைகள். ஒரு நாளிதழை, இடைவிடாமல், 70 ஆண்டுகள் நடத்துவது எளிதல்ல. வழக்கமாக, தந்தை அல்லது தாத்தா துவங்கிய தொழிலில் இருந்து, அதன் வாரிசுகள் வெவ்வேறு தொழில்களுக்கு மாறுவது வழக்கம். நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் புதல்வர்களும், வாரிசுகளும் தங்களை, பத்திரிகை துறைக்கே முழுமையாக அர்ப்பணித்து செயல்படுகின்றனர்.

தமிழகத்தில் லட்சக்கணக்கான வீடுகளுக்கு, 'தினமலர்' நாளிதழை சேர்ப்பிக்க, டாக்டர் இரா.லட்சுமிபதி நங்கூரமாக செயல்பட்டிருக்கிறார். வாசகர்கள் எண்ணிக்கை, 10 நகரங்களுக்கு விரிவடைந்ததை வைத்து, மக்களின் நம்பகத்தன்மையை எளிதாக அறியலாம்.ஒரு நாளிதழ் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், நாளிதழ் பற்றிய ஞானம், தொழில்நுட்பம், துணிவு, பொருளாதார பலம் தேவை.

ஞானமும், விசாலமான பார்வையும், அரசுகளை எதிர்த்து செய்திகளை வெளியிடும் அசாத்திய துணிச்சலும் இல்லையெனில், பத்திரிகை நடத்துவது இயலாத காரியம்.வாசகர்களுக்கு எது தேவை என கருதி, அதை தருவது 'தினமலர்' பாணி. வணிக நோக்கத்தோடு விற்பனையை குறிக்கோளாகக் கொண்டு, ஆபாசங்களையும், அருவருப்புகளையும், வன்முறைகளையும் துாண்டும் செய்திகள் 'தினமலர்' இதழில், வந்ததாக யாரும் சொல்ல முடியாது.'தினமலர்' செய்தியை பார்த்து, கோபப்படாத அரசியல்வாதியே இருக்க முடியாது; மகிழ்ச்சியுறாத அரசியல்வாதியும் இருக்க முடியாது.

ஜனநாயக கடமையில் இருந்து இம்மியளவும் பிசகாமல், நடுநிலையோடு செயல்படும் ஒரே நாளிதழ் 'தினமலர்'.மக்கள் பிரச்னைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும், தேசப்பற்றை வளர்க்கும் வகையிலும், 70 ஆண்டுகளாக செயல்படுவதைபோல், 100 ஆண்டுகள் கடந்து, ஆயிரமாயிரம் காலம் தமிழக மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் 'தினமலர்' மலர வாழ்த்துகிறேன்.இவ்வாறு, கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X