மெக்சிகோவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவின் தலைநகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் டவுண்டவுன் டூலா நகரில் நேற்று (செப்.,7) அதிகாலை திடீரென கனமழை பெய்தது. கனமழை காரணமாக அந்நகரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று
Mexico, Powerful Earthquake, Hits, Near Acapulco, மெக்சிகோ, நிலநடுக்கம், கனமழை

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவின் தலைநகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் டவுண்டவுன் டூலா நகரில் நேற்று (செப்.,7) அதிகாலை திடீரென கனமழை பெய்தது. கனமழை காரணமாக அந்நகரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த 16 நோயாளிகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.


latest tamil news


இது ஒருபுறம் இருக்க, மெக்சிகோவில் உள்ள குரெரோவின் அகாபுல்கோவில் இந்திய நேரப்படி இன்று (செப்.,8) காலை 7:17 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானதாகவும், இந்த நிலநடுக்கம் மெக்சிகோ நகரம் வரை கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியதாகவும் நில அதிர்வு நிபுணர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதை அடுத்து, பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
08-செப்-202110:44:35 IST Report Abuse
Rajesh 7.1 ரிக்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X