குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (136) | |
Advertisement
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: குடியுரிமை பெற மதம் அடிப்படை அல்ல. மதத்தினை அடிப்படையாக கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.அகதிகளாக வருபவர்களை சக
குடியுரிமை சட்டம், சட்டசபை, தீர்மானம், முதல்வர், ஸ்டாலின், சிஏஏ

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: குடியுரிமை பெற மதம் அடிப்படை அல்ல. மதத்தினை அடிப்படையாக கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.


சிஏஏ ரத்து தீர்மானம் பாஜக எதிர்ப்பு!

latest tamil news
அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும். மத்திய அரசு வஞ்சனையுடன் செயல்படுகிறது. மதம், மொழி, இனம் கடந்து ஒற்றுமையுடன் மக்கள் வாழ்கின்றனர். நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ள இந்த சட்டம் தேவையா? மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களின் கருத்துகளை அரசு கேட்க வேண்டும். ஒற்றுமையை மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாக்க இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்தி பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது . சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம். இலங்கை தமிழர் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. சட்டப்படியான சமத்துவம், பாதுகாப்பை அரசு மறுக்க முடியாது. குடியுரிமை சட்டம் மதத்தை அடிப்படையாக கொண்டு குடியுரிமை வழங்க வகை செய்வதாக உள்ளது என தெரிவித்த அவர், தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லாததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


பா.ஜ., வெளிநடப்பு


இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பேசும்போது, இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை சட்டம் எதிரானது அல்ல. வேற்றுமையில் ஒற்றுமையை கடைபிடிக்கும் நாடு இந்தியா எனக்கூறினார். தொடர்ந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhu - Trichy,இந்தியா
10-செப்-202121:39:39 IST Report Abuse
 Madhu தமிழ் நாட்டிலும் சரி இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் சரி அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்கள் பல தோன்றி விட்டன. இங்கே நீங்கள் உங்கள் உறவினரைப் பார்க்கச் செல்ல வேண்டுமெனில் வாசலில் உள்ள செக்யூரிட்டி ரூமில் உங்கள் பெயர், விலாசம், செல் நம்பர் முதலியவற்றை ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்து தேதி, உள்ளே நுழையும் நேரம், வெளியேறும் நேரம் முதற்கொண்டு எழுதி கையெழுத்திட வேண்டும் விருந்தினர்கள் / ஒரு சில நாட்களுக்குத் தங்குபவர் எனில் ஃப்ளாட் நெம்., ஃப்ளாட் ஓனர் பெயர், உங்கள் சொந்தக் கார் நெம்பர் இத்தனையும் பதிவு செய்தாக வேண்டும். தவிரவும் இதுபோன்ற வளாகங்களில் உள்ள சிசிடிவி காமிராக்களைக் கடந்து சென்றுதான் உள்ளே செல்ல இயலும். ஏன் என்று புரிகிறதா? உள் நாட்டில் உங்கள் சொந்த ஊரில் உள்ள உங்கள் உறவினர் இருக்கும் குடியிருப்பு வளாகத்திற்குள்ளே செல்லவே இவ்வளவு கட்டுப்பாடுகள் எனில், இந்தியா போன்றதொரு தேசத்தில் யார் யார் நம் தேசத்தவர், யார் யார் வெளிநாட்டிலிருந்து உரிய ஆவணங்களுடன் வந்துள்ளனர், எவர் எவர் திருட்டுத்தனமாக வந்து குடியேறியுள்ளனர் என்பதை அறிய அரசாங்கத்திற்கு உரிமையும் அதிகாரமும் உள்ளது. அதேபோல், எவரெவர்க்கு குடியுரிமை வழங்குவது எவரெவர்க்கு அகதிகள் எனும் பிரிவில் தற்காலிகமாகத் தங்க வைப்பது என்பதில் அரசுக்கு முடிவெடுக்கும் உரிமையும் உண்டு. இதனை நாட்டின் இறையாண்மையை மதிப்பவர்களும் ஒற்றுமையைக் கவனத்தில் கொள்வோரும் ஆதரிப்ப
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
13-செப்-202111:35:40 IST Report Abuse
தமிழன்எந்த மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவது என்பதை ஆளும் பிஜேபி கட்சி மட்டும் எப்படி முடிவெடுக்க முடியும்?? அரசு என்பது ஆளும் கட்சியும் எதிர் கட்சியும்தான் என்பதை முதலில் உணர்ந்து பேசுங்கள்......
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
10-செப்-202117:29:14 IST Report Abuse
 Madhu தமிழ் நாட்டிலும் சரி இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் சரி அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்கள் பல தோன்றி விட்டன. இங்கே நீங்கள் உங்கள் உறவினரைப் பார்க்கச் செல்ல வேண்டுமெனில் வாசலில் உள்ள செக்யூரிட்டி ரூமில் உங்கள் பெயர், விலாசம், செல் நம்பர் முதலியவற்றை ஒரு ரிஜிஸ்டரில் பதிவு செய்து தேதி, உள்ளே நுழையும் நேரம், வெளியேறும் நேரம் முதற்கொண்டு எழுதி கையெழுத்திட வேண்டும் விருந்தினர்கள் / ஒரு சில நாட்களுக்குத் தங்குபவர் எனில் ஃப்ளாட் நெம்., ஃப்ளாட் ஓனர் பெயர், உங்கள் சொந்தக் கார் நெம்பர் இத்தனையும் பதிவு செய்தாக வேண்டும். தவிரவும் இதுபோன்ற வளாகங்களில் உள்ள சிசிடிவி காமிராக்களைக் கடந்து சென்றுதான் உள்ளே செல்ல இயலும். ஏன் என்று புரிகிறதா? உள் நாட்டில் உங்கள் சொந்த ஊரில் உள்ள உங்கள் உறவினர் இருக்கும் குடியிருப்பு வளாகத்திற்குள்ளே செல்லவே இவ்வளவு கட்டுப்பாடுகள் எனில், இந்தியா போன்றதொரு தேசத்தில் யார் யார் நம் தேசத்தவர், யார் யார் வெளிநாட்டிலிருந்து உரிய ஆவணங்களுடன் வந்துள்ளனர், எவர் எவர் திருட்டுத்தனமாக வந்து குடியேறியுள்ளனர் என்பதை அறிய அரசாங்கத்திற்கு உரிமையும் அதிகாரமும் உள்ளது. அதேபோல், எவரெவர்க்கு குடியுரிமை வழங்குவது எவரெவர்க்கு அகதிகள் எனும் பிரிவில் தற்காலிகமாகத் தங்க வைப்பது என்பதில் அரசுக்கு முடிவெடுக்கும் உரிமையும் உண்டு. இதனை நாட்டின் இறையாண்மையை மதிப்பவர்களும் ஒற்றுமையைக் கவனத்தில் கொள்வோரும் ஆதரிப்பதும், நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பதும் கடமை என்பதை உணர வேண்டும்.
Rate this:
Cancel
Dmr323077 -  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-202109:14:13 IST Report Abuse
Dmr323077 Who are you to restrict the law passed by the central government. Who gave the authority can you show under which law you are passing this.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X