கோடநாடு வழக்கு: டி.ஐ.ஜி., தலைமையில் இருவரிடம் விசாரணை

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, வாகன உரிமையாளர், இடைத்தரகரிடம் டிஐஜி முத்துசாமி தலைமையில் தனிப்படை குழுவினர் விசாரணை நடத்தினர்.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி பழைய எஸ்.பி., அலுவலகத்தில் நடந்து வருகிறது. மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, விசாரணை வேகம் பிடித்துள்ளது.இன்று காலை, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,
கோடநாடு, கொலை, கொள்ளை, விசாரணை, டிஐஜி

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, வாகன உரிமையாளர், இடைத்தரகரிடம் டிஐஜி முத்துசாமி தலைமையில் தனிப்படை குழுவினர் விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி பழைய எஸ்.பி., அலுவலகத்தில் நடந்து வருகிறது. மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, விசாரணை வேகம் பிடித்துள்ளது.


latest tamil news


இன்று காலை, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி ஆகியோர் தனிப்படை குழுவினருடன் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினர்.


latest tamil news



தொடர்ந்து, பழைய எஸ்.பி., அலுவலகத்தில் டி.ஐ.ஜி., முத்துசாமி தலைமையில், நீலகிரி எஸ்.பி.,ஆசிஷ் ராவத் மற்றும் தனிப்படை குழுவினர் இன்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், 41வது சாட்சியான கார் உரிமையாளர் நவுசத், 42 வது சாட்சியான இடைத்தரகர் நவ்புல் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
08-செப்-202119:34:32 IST Report Abuse
Nesan . எல்லாம் அரசியல் .... அரசியல்வாதிகள் நேர்மையாளராக இல்லாதவரை ஒரு மண்ணும் நடக்காது
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
08-செப்-202113:03:53 IST Report Abuse
Kanthan Iyengaar விசாரணையை தடுக்க நினைச்சவா இப்போ மாத்தி யோசிப்பா...விசாரணையை தடம் மாற்ற முயற்சிப்பா.. பொய்யான தகவலை கொடுத்து விசாரணை செய்யும் ஆட்களை அலைக்கழிப்பா...வேற பாதையிலே திருப்பி விட பார்ப்பா...அறிவியல் பூர்வமா இத நிரூபிக்கறது தான் உண்மையான வழிமுறையா இருக்கும்...மோடி அரசாங்கம் இத மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற கோணத்தில் கண்டுகொள்ளாமல் விட்டதா இல்லை அந்த சமயத்தில் மத்திய உளவு துறையை வைத்து எத்தனை தடயங்களை சேர்த்து பாதுகாத்து இருக்கா என்று தெரிந்துகொள்வது கூட நல்லதா இருக்கும். நேர்மை மேலே நம்பிக்கை இருந்தா ஒன்றிய அரசு இதில் ஒத்துழைப்பு தரும்., தரணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X