கோடநாடு வழக்கு: டி.ஐ.ஜி., தலைமையில் இருவரிடம் விசாரணை| Dinamalar

கோடநாடு வழக்கு: டி.ஐ.ஜி., தலைமையில் இருவரிடம் விசாரணை

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (2) | |
ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, வாகன உரிமையாளர், இடைத்தரகரிடம் டிஐஜி முத்துசாமி தலைமையில் தனிப்படை குழுவினர் விசாரணை நடத்தினர்.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி பழைய எஸ்.பி., அலுவலகத்தில் நடந்து வருகிறது. மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, விசாரணை வேகம் பிடித்துள்ளது.இன்று காலை, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,
கோடநாடு, கொலை, கொள்ளை, விசாரணை, டிஐஜி

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, வாகன உரிமையாளர், இடைத்தரகரிடம் டிஐஜி முத்துசாமி தலைமையில் தனிப்படை குழுவினர் விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி பழைய எஸ்.பி., அலுவலகத்தில் நடந்து வருகிறது. மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, விசாரணை வேகம் பிடித்துள்ளது.


latest tamil news


இன்று காலை, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், டி.ஐ.ஜி., முத்துசாமி ஆகியோர் தனிப்படை குழுவினருடன் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினர்.


latest tamil news



தொடர்ந்து, பழைய எஸ்.பி., அலுவலகத்தில் டி.ஐ.ஜி., முத்துசாமி தலைமையில், நீலகிரி எஸ்.பி.,ஆசிஷ் ராவத் மற்றும் தனிப்படை குழுவினர் இன்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், 41வது சாட்சியான கார் உரிமையாளர் நவுசத், 42 வது சாட்சியான இடைத்தரகர் நவ்புல் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X