நிபா வைரஸ்: கேரளாவில் 51 பேர் மருத்துவமனையில் அனுமதி

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையே இன்னும் ஓயாத நிலையில் நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது 17 பேர் பலியாகினர். அதன்பின் நோயின் தாக்கம் குறைந்தது. 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 12

திருவனந்தபுரம்: கேரளாவில் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையே இன்னும் ஓயாத நிலையில் நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது.
கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது 17 பேர் பலியாகினர். அதன்பின் நோயின் தாக்கம் குறைந்தது. 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், நிபா வைரஸ் காய்ச்சலால் கடந்த 5ம் தேதி பரிதாபமாக இறந்தான்.



latest tamil news


நிபா வைரஸ் பாதிப்பு கேரளாவில் 51 பேர் அட்மிட்




நேரடி தொடர்பில் 257 பேர்


சிறுவனுடன் தொடர்பில் இருந்த அவனது பெற்றோர், உறவினர்கள், சிகிச்சை அளித்த சுகாதார பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. முதற்கட்டமாக சிறுவனுடன் நேரடி தொடர்பில் இருந்த 257 பேர் கண்டறியப்பட்டனர். நெருங்கிய தொடர்பில் இருந்த 51 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருந்தது. அவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news





வீட்டுத் தனிமையில் 35 பேர்


நிபா வைரஸ் பாதிப்பால் இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த சிலர், கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து மலப்புரம், பாலக்காடு, கண்ணூர், வயநாடு, எர்ணாகுளம், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கும் சென்றது தெரியவந்தது. எனவே இந்த மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். இதில் 35 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
08-செப்-202113:40:20 IST Report Abuse
A.George Alphonse கேரளாவில் இருந்து யார் வந்தாலும் அவர்களை எங்கேயும் அனுமதிக்க கூடாது.வான், கடல், தரை வழிகளை இந்த மாநிலத்துடன் துண்டிக்க வேண்டும். இவர்கள்தான்எல்லா புதுவகை நோய்களையும் நமது நாட்டில் முதல் முதலில் பரப்புபவர்கள் .யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை தவறாமல் கடைபிடிக்கும் பிழைக்க தெரிந்த மேதாவிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X