சிதைந்த நிலையில் பெண் சடலம் மாயமானவர் பட்டியல் சேகரிப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
கோவை : கோவையில் ரோட்டில் சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், மாயமானவர்களின் பட்டியல் சேகரித்து விசாரிக்கப்படுகிறது.கோவை, அவிநாசி ரோடு, சின்னியம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை, 45-50 வயது மதிக்கத்தக்க பெண் தலை முழுவதும் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தார்.கண்காணிப்பு கேமரா காட்சிகளில் ஒரு காரில் இருந்து பெண் துாக்கி வீசப்பட்டது போன்ற


கோவை : கோவையில் ரோட்டில் சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், மாயமானவர்களின் பட்டியல் சேகரித்து விசாரிக்கப்படுகிறது.
கோவை, அவிநாசி ரோடு, சின்னியம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை, 45-50 வயது மதிக்கத்தக்க பெண் தலை முழுவதும் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தார்.கண்காணிப்பு கேமரா காட்சிகளில் ஒரு காரில் இருந்து பெண் துாக்கி வீசப்பட்டது போன்ற பதிவுகள் கிடைத்தன.அசைவற்ற நிலையில்ஒரு பொம்மையை துாக்கிவீசுவது போல் காட்சிகள் உள்ளன இதனால், பீளமேடு போலீசார் சந்தேகமரணம் என்று வழக்கு பதிந்து, 2 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

பெண்ணின் சடலத்தில் புடவை இல்லாமல் உள்ளாடையுடன் இருந்ததால், கொலை செய்து விபத்து நடந்ததுபோல் நாடகமாடி பெண்ணின் முகத்தை சிதைத்து இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.கோவை மாநகர், மாவட்டம், திருப்பூர், பாலக்காடு, ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கடந்தசில நாட்களில் மாயமான பெண்களின் பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நேற்று கோவை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கும் என்றும், அதில் இறப்புக்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X