பாரதி இல்லம் பார்க்கலாம் வாருங்கள்

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021
Share
Advertisement
வருகிற 12 ம்தேதி மகாகவி பாரதி இறந்த நுாற்றாண்டு நினைவு நாளாகும்.இதை முன்னிட்டு அவர் வாழ்ந்த சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகில் உள்ள நினைவு இல்லத்திற்கு பலரும் வருவர் என்பதால் துாசு துடைத்து சுத்தமாக வைத்துள்ளனர்.பாரதியின் வாழ்க்கையை பல அபூர்வ படங்கள் மூலம் இந்த இல்லம் சொல்கிறதுபாரதிக்கு யார் பாரதி என்ற பெயரைக் கொடுத்தது?பாரதி எத்தனைlatest tamil news


வருகிற 12 ம்தேதி மகாகவி பாரதி இறந்த நுாற்றாண்டு நினைவு நாளாகும்.
இதை முன்னிட்டு அவர் வாழ்ந்த சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகில் உள்ள நினைவு இல்லத்திற்கு பலரும் வருவர் என்பதால் துாசு துடைத்து சுத்தமாக வைத்துள்ளனர்.
பாரதியின் வாழ்க்கையை பல அபூர்வ படங்கள் மூலம் இந்த இல்லம் சொல்கிறது


latest tamil news


பாரதிக்கு யார் பாரதி என்ற பெயரைக் கொடுத்தது?
பாரதி எத்தனை விதமான பெயர்களில் எழுதினார்?
பாரதியின் கையெழுத்து எப்படியிருக்கும்?
பாரதி எழுதியது எத்தனை புத்தகங்கள்? பாரதி பற்றி எத்தனை புத்தகங்கள் வெளிவந்துள்ளது?


latest tamil news


முப்பத்தைந்து வயது பாரதி எங்கு எதற்காக கையில் தடி ஏந்தினார்?
பாரதி வீட்டில் வைத்து வணங்கிய தெய்வச்சிலை எது?
இப்படி பாரதி பற்றிய பல விஷயங்களை இந்த பாரதி இல்லம் கொண்டுள்ளது
வெளியே இருந்து பார்க்கும் போது பிரம்மாண்டமாக தெரியும் இந்த பாரதி இல்லத்திலா வறுமையில் வாடிய பாரதி இருந்தார், இறந்தார் என்று சாதாரணமாக கேள்வி வரும் அதற்கான விடை உள்ளே போனபிறகுதான் கிடைக்கிறது


latest tamil news


அந்த கட்டிடத்தில் கிட்டத்தட்ட 12 ஒண்டிக்குடித்தனங்கள் இருந்தன அதில் பாரதியின் குடித்தனமும் ஒன்று பின்னாளில் கட்டிடம் வேறு ஒருவர் கைக்கு மாறி அவரால் பராமரிக்கப்படாமல் பாழானது பின்னரே அரசு கவனம் செலுத்தி மகாகவியின் பெயரைச் சொல்ல எஞ்சியிருக்கும் இந்த கட்டிடத்தை விட்டுவிடக்கூடாது என்று அரசுடைமையாக்கி நிறைய செலவு செய்து புதுப்பித்தது.
அப்படி புதுப்பிக்கப்பட்ட கட்டிடம்தான் நாம் இப்போது பார்ப்பது
வாசலில் கம்பீரமான சிலையாக நின்று பாரதி வரவேற்கிறார் உள்ளே உள்ள நான்குக்கும் மேற்பட்ட அறைகளில் நாம் மேலே கேட்ட கேள்விகளுக்கான படங்கள் பதிலாக இருக்கிறது.
உள்ளே சிறு அரங்கம் ஒன்றும் உள்ளது இங்கே பாரதி தொடர்பான பல விழாக்கள் நடந்தது.நடந்தது என்று சொல்லக்காரணம் கொரோனா காரணமாக முடங்கிப் போனதில் இந்த அரங்கமும் ஒன்றாகிப் போனதால்.
இப்போது தளர்வுகள் நீக்கப்பட்ட நிலையில் அவரது நுாற்றாண்டு நினைவு தினத்தன்று சிறப்பு சொற்பொழிவு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளம் கபடமில்லாத நமது குழந்தைகள் மனதில் தேச பக்தியையும், பாரதியின் உறுதியையும், அவரது கவித்திறனையும் விதைக்க இதை விட சிறந்த இடம் எதுவும் இருக்கப்போவது இல்லை இதுவரை இல்லை என்றாலும் பராவாயில்லை அவரது நாற்றாண்டு நினைவு தினத்தை காரணம் வைத்தாவது குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்
-எல்.முருகராஜ்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X