ஸ்ரீநகர்: ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் எனவும், மனித உரிமையை மதித்து நடப்பார்கள் எனவும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு, புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்தனர். இதன்படி புதிய பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டு உள்ளார். துணை பிரதமர்களாக முல்லா அப்துல் கனி பராதர் மற்றும் மவுல்வி ஹவி ஹனாவி ஆகியோர் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியதாவது: ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள். மனித உரிமையை மதித்து நடப்பார்கள் என நம்புகிறேன். அனைத்து நாடுகளுடன் அவர்கள் நட்புறவை அவர்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அவரது இந்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE