கீழ்பவானி வாய்க்காலில் 12ல் தண்ணீர் திறப்பு? உடைப்பை சீரமைக்கும் பணி இன்று நிறைவு| Dinamalar

தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்காலில் 12ல் தண்ணீர் திறப்பு? உடைப்பை சீரமைக்கும் பணி இன்று நிறைவு

Added : செப் 08, 2021
Share
ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில், கான்கிரீட் தளத்தில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கும் நிலையில், 12ம் தேதி வாய்க்காலில் தண்ணீர் திறக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து, கடந்த மாதம், 15ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், 20ம் தேதி நசியனூர் அருகே கண்ணவேலம்பாளையம் பகுதியில்

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில், கான்கிரீட் தளத்தில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கும் நிலையில், 12ம் தேதி வாய்க்காலில் தண்ணீர் திறக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து, கடந்த மாதம், 15ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், 20ம் தேதி நசியனூர் அருகே கண்ணவேலம்பாளையம் பகுதியில் கான்கிரீட் தளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதில், 200 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக முள்ளம்பட்டி, பள்ளிபாளயம், பள்ளத்தூர் பகுதிகளில் விவசாய நிலங்கள், வீடுகளுக்குள் புகுந்த நீர் மூன்று நாட்களுக்கு பிறகே முற்றிலும் வடிந்தது. அதன் பின் வாய்க்கால் சீரமைப்பு பணி துவங்கியது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதாவது, 140 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 35 அடி ஆழத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. கான்கிரீட் பணி இன்று காலை நிறைவு பெற செய்ய திட்டமிட்டு பணி நடக்கிறது. இன்று மாலைக்குள் பணி முடிந்து, 12ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முறைகேட்டுக்கு தண்டனை நோ... இழப்பீடுக்கு நிவாரணம் அம்போ? வாய்க்கால் உடைப்பால், 200 ஏக்கரிலான நிலத்தில், விவசாய பயிர் சேதமானது. இதற்கு நிவாரணம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இழப்பு குறித்து வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. அதேசமயம் அரைகுறையாக பணி செய்த ஒப்பந்ததாரருக்கு தண்டனை கிடைக்குமா? என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. உடைப்பை சரி செய்வதில் தீவிரம் காட்டும் அதிகார வர்க்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருவதிலும், அரைகுறை பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் உரிய தொகையை வசூலிக்கவும் வேண்டும் என்பது, விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X