தமிழ்நாடு

ஓசூரில் திரும்பும் திசையெல்லாம் பேனர்கள்: அதிகாரிகள், போலீசார் மவுனம் கலையுமா?

Added : செப் 08, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், திரும்பும் திசையெல்லாம் பேனர்கள் தான் காட்சியளிக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள், போலீசார், மாவட்ட நிர்வாகம் என, எந்த தரப்பும் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது.தமிழக - கர்நாடகா மாநில எல்லையிலுள்ள ஓசூரில் பேனர் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தனியார் கட்டடங்கள் மற்றும் சாலையோரங்களில் ராட்சத பேனர்கள்

ஓசூர்: ஓசூரில், திரும்பும் திசையெல்லாம் பேனர்கள் தான் காட்சியளிக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள், போலீசார், மாவட்ட நிர்வாகம் என, எந்த தரப்பும் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது.


தமிழக - கர்நாடகா மாநில எல்லையிலுள்ள ஓசூரில் பேனர் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தனியார் கட்டடங்கள் மற்றும் சாலையோரங்களில் ராட்சத பேனர்கள் காட்சியளிக்கின்றன. இவை சரிந்து விழுந்தால், மக்கள் உயிரை காவு வாங்கி விடும். அதுமட்டுமின்றி, மின்கம்பங்கள் மீதும் அதிகளவில் பேனர்கள் வைக்கப்படுகின்றன.

போலீஸ் பூத்திலும்...: ஓசூர், ராயக்கோட்டை சாலை சந்திப்பு மற்றும் பஸ் ஸ்டாண்ட் எதிரே, மேம்பாலத்திற்கு அடியில் உள்ள போக்குவரத்து போலீசார் பூத்தில் கூட, பெரிய அளவில் விளம்பர பேனர்கள் காட்சியளிக்கின்றன. உரிய அனுமதியின்றி வைக்கப்படும் இதுபோன்ற பேனர்களை அகற்ற வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், போலீசார், மாவட்ட நிர்வாகம் என, எந்த துறையும் கண்டுகொள்வதாக இல்லை.

பஞ்சாயத்திலும்: ஓசூர் நகரில் தான் பேனர்கள் அதிகளவில் உள்ளது என்றால், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., மற்றும் சூளகிரி பகுதிகளில் கூட, அதிகளவில் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்படுகின்றன. இதை, அங்குள்ள உள்ளாட்சித்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அதிகாரிகள் மவுனத்திற்கு காரணம், கவனிப்பா அல்லது அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தமா, என்பது கேள்விக்குறியாக உள்ளது. அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை இரும்பு கரம் கொண்டு அதிகாரிகள் அகற்ற முன்வர வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X