பொது செய்தி

இந்தியா

கிராமப்புறங்களில் டிவிக்கு அடுத்த இடத்தில் யுடியூப்: ஊடக நிறுவன ஆய்வில் தகவல்

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புது டில்லி: ஊடக நிறுவனமான குரூப்-எம் மற்றும் ஆலோசனை நிறுவனமான கந்தர் இணைந்து நடத்திய ஆய்வில், கிராமப்புறங்களில் தொலைக்காட்சிகளுக்கு அடுத்ததாக மக்கள் யுடியூபை அதிகம் பார்ப்பதாக தெரியவந்துள்ளது. இணையப் புரட்சியினால் இது சாத்தியமானதாக குறிப்பிட்டுள்ளனர். 'கிராமப்புற கோவிட் சூழல் அறிக்கை' என்ற பெயரில் இந்நிறுவனங்கள் இரண்டாவது ஆண்டாக ஆய்வு முடிவுகளை

புது டில்லி: ஊடக நிறுவனமான குரூப்-எம் மற்றும் ஆலோசனை நிறுவனமான கந்தர் இணைந்து நடத்திய ஆய்வில், கிராமப்புறங்களில் தொலைக்காட்சிகளுக்கு அடுத்ததாக மக்கள் யுடியூபை அதிகம் பார்ப்பதாக தெரியவந்துள்ளது. இணையப் புரட்சியினால் இது சாத்தியமானதாக குறிப்பிட்டுள்ளனர்.



latest tamil news



'கிராமப்புற கோவிட் சூழல் அறிக்கை' என்ற பெயரில் இந்நிறுவனங்கள் இரண்டாவது ஆண்டாக ஆய்வு முடிவுகளை வெளியிடுகின்றன. இதில் இரண்டாவது அலையின் தாக்கம் மற்றும் அது எவ்வாறு நுகர்வோரின் செயல்பாடுகள் மற்றும் வாங்கும் முறையை மாற்றியுள்ளது என்பதைப் பற்றி ஆராய்ந்துள்ளனர். இந்த ஆய்வு 18 மாநிலங்களில் 3,800 கிராமப்புற நபர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. தங்கள் கிராமங்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களிடமும் ஆய்வு செய்ததாக அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வின் படி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புறத்தினர் இணையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். யுடியூப் மூலம் 87% பேர் வீடியோ பார்க்கின்றனர். 69% இசை அல்லது ஆடியோவுக்காக இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதற்கு அடுத்ததாக 49% பேர் செய்திகளுக்காக இணையத்தை நாடுகின்றனர். 33சதவீதம் பேர் வீடியோ கேம்ஸ்களுக்காக இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதே போன்று 30சதவீதம் பேர் ஓ.டி.டி., தளங்களையும் பார்க்கின்றனர்.


latest tamil news



சமூக ஊடகங்களை பொறுத்தவரை கிராமப்புறங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 87சதவீதமாக ஆக உள்ளது. 66சதவீதம் பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை ஒடிஷா, உ.பி., குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகம் இருப்பதாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். சேமிப்பை பொறுத்தவரை கிராமப்புறங்களில் வருமானத்தில் 25சதவீத அளவுக்கு சேமிப்பதாகவும், நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது தமிழகம் தவிர பிற தென்னிந்திய மாநிலங்கள் அதிக சேமிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
09-செப்-202108:03:26 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இங்குள்ள ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும். அவர்களது தொல்லை தாங்க முடியவில்லை
Rate this:
Cancel
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
09-செப்-202102:09:15 IST Report Abuse
ஏகன் ஆதன் யூ ட்யூபும் , நெட் பிலிஸும் தமிழக மக்களை சன் டிவி கொடுமையில் இருந்து காப்பாற்ற வந்துள்ளன
Rate this:
Cancel
08-செப்-202121:42:49 IST Report Abuse
அப்புசாமி உலகத்தில் உள்ள கண்ட கண்ட பலான படங்களை சென்சார் இல்லாமே அப்பிடியே ஃப்ரீயா பாத்துறலாம். யூ டியூபைப் போல மக்களைக் கெடுக்கும் ஊடகம் வேறெங்கும் காணோம். நம்ம ஊர் அடல்ஸ் ஒன்லி படங்களை கோவில் கட்டி கும்புடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X