சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஆடத் தெரியாத ஆட்டக்காரி!

Added : செப் 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஆடத் தெரியாத ஆட்டக்காரி!ஆர்.சுப்ரமணியம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்க்கட்சிகள் சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தின. அதில் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 20 முதல்-- 30ம் தேதி வரை, நாடு முழுதும் போராட்டங்களை நடத்த


ஆடத் தெரியாத ஆட்டக்காரி!ஆர்.சுப்ரமணியம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்க்கட்சிகள் சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தின. அதில் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 20 முதல்-- 30ம் தேதி வரை, நாடு முழுதும் போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனவாம்.
அதன்படி, மத்திய அரசைக் கண்டித்து வரும் 20-ம் தேதி வீடுகள் முன் கறுப்பு கொடியேந்தி போராட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.அதாவது அக்கட்சிகள், நாட்டை ஆள, நிர்வகிக்க, நம் பிரதமர் மோடிக்கு தெரியவில்லை என குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்த உள்ளன.மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்போம் என வாக்குறுதி அளித்து தானே, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது.இப்போது மத்திய அரசை குறை கூறுவதால், தி.மு.க.,விற்கு ஆள தெரியவில்லை என்று தானே அர்த்தம்?பிரதமர் மோடி வலிமையாக ஆட்சி நடத்தி வருவதால், அதை சகித்து கொள்ள இயலாத காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த முகூர்த்தம் குறித்துள்ளன.
'ஆடத் தெரியாத ஆட்டக்காரி, கூடம் கோணல் என்றாளாம்' என்று ஒரு சொலவடை உண்டு.அது போல, ஆள தெரியாத தி.மு.க., தன் இயலாமையை மறைக்க, மத்திய அரசு மீது பழியை போட்டு, போராட்டம் எனும் வேடிக்கை காட்டி தப்பிக்க முயற்சி செய்கிறது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு; தி.மு.க., அரசின் சாயம் வெளுத்தது 100 நாட்களில்!


கடனுக்கு நாங்கள் பொறுப்பில்லை!சையது முகமது, புதுக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலக வங்கி, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் கடன் வழங்குகிறது. ஆனால், கடன் வழங்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறுகிறதா என்பதை, உலக வங்கி நிர்வாகிகள் ஆய்வு செய்ய வேண்டும்.வங்கி நிர்வாகம் தனி நபருக்கோ, ஒரு நிறுவனத்திற்கோ கடன் வழங்குகிறது என்றால், அதற்கு ஈடாக தங்கம், வீடு, நிலம் என முக்கிய சொத்துக்களை பெற்றுக் கொள்ளும்.ஆனால், உலக வங்கி நிர்வாகம் வழங்கும் கடன்களுக்கு ஈடாக, எதையும் பெற்றுக் கொள்வதில்லை.உலக வங்கியிடம் திட்டங்களை கூறி கடன் வாங்குவதும், அதை செலவு செய்வதும் ஆட்சியாளர்களே! அந்த திட்ட தொகையில் முடிந்த வரை, 'சுருட்டி' கொள்கின்றனர்; பின் அத்திட்டத்தை, 'அம்போ' என கிடப்பில் போட்டு
விடுகின்றனர்.உலக வங்கி நிர்வாகிகளே...தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும், 1.10 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என அரசு தெரிவித்துள்ளது.சத்தியமாக சொல்கிறோம்... இந்த கடனுக்கும், மக்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையவே கிடையாது!கடன் வாங்குவதற்கு முன், மக்களாகிய எங்களிடம் கலந்தாலோசிக்கவும் இல்லை; ஒப்புதலும் பெறவில்லை. எங்கள் அனுமதியின்றி பெறப்பட்ட கடனுக்கு, நாங்கள் பொறுப்பேற்க முடியாது.கொடுக்கப்பட்ட கடன் தொகைகளுக்கும், அதன் வட்டிக்கும், இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளும், எம்.எல்.ஏ.,க்களும் தான் பொறுப்பு.இப்போதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கலாம் என்று தான், ஆட்சியாளர்கள் திட்டம் போடுகின்றனர்.உலக வங்கி இனிமேல் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் ஈடாக பெற்ற பின் தான், தமிழக அரசுக்கு கடன் வழங்க வேண்டும்.
காலக்கெடுவுக்குள் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாவிட்டால், அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்தி கொள்ளலாம்.இதுபோல கெடுபிடி காட்டினால் போதும்... 'ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே' என, உலக வங்கியின் நிதியை அரசியல்வாதிகள் 'லவட்ட'
முடியாது!


-திராணி இல்லாத கட்சிகள்!வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., அல்லது அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து கொள்ளும் உதிரி கட்சிகள், தேர்தலில் தங்களின் சின்னத்தில் நின்றால் வெற்றி பெற முடியாது என்பதால், உதயசூரியன் அல்லது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன.கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடுவது எதிர்கால பிரச்னையை தடுக்கும் என்பதால், இரு திராவிட கழகங்களும் அதை ஊக்குவிக்கின்றன.இப்போது எதற்கு இந்த விவகாரம் என கேள்வி எழுகிறதா?தி.மு.க., சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற பிற கட்சிகளை, எதிர்க்கட்சியாக கருதக் கூடாது என்ற வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவை தட்டி உள்ளது.ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, வி.சி., வேட்பாளர்கள் நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., சின்னத்தில் நின்று வெற்றி பெற்றனர்.அவர்கள், சட்டசபை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இது சரியான முன்னுதாரணமாக அமையாது.மேலும், 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை, எதிர்க்கட்சி வரிசையில் முன்னிலைப்படுத்துவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்' என அந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளது.பிற கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர், தம் கட்சியின் கொள்கைப்படி செயல்பட முடியாது.சொந்த சின்னத்தில் போட்டியிட கூட திராணி இல்லாத, சுயநலமிக்க அந்த உதிரிக்கட்சிகளை, ஏதாவது ஒரு திராவிட கட்சியில் இணைத்து விடலாம்.எக்கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், சொந்த சின்னத்தில் போட்டியிடும் வலிமை இருக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச தன்மானம் கூட இல்லை என்றால், பின் எதற்கு தனியாக கட்சி நடத்த வேண்டும்?
எப்படியாவது பதவியில் அமர வேண்டும் என்பதற்காக, அரசியல்வாதிகள் நடத்தும் கேலி கூத்துக்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது!

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-செப்-202115:43:03 IST Report Abuse
D.Ambujavalli கழுத்து வரை கடன் என்று சொல்லிக்கொண்டு, நினைவிடம், சிலைகள் என்று கோடிகோடியாக வாரிவிடுவார்களாம், அடுத்து பட்ஜெட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் கடன் ஐந்து லட்சம் என்பார்களாம் நாங்கள் உதவாக்கரை திட்டங்களும், தெருவுக்கு எட்டு சிலைகளும், மெரினா கொள்ளாத நினைவிடம் களும் கேட்டோமா?
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
09-செப்-202115:33:21 IST Report Abuse
Anantharaman Srinivasan நம்நாட்டில் தேர்தல் ஆணையமே கேலி கூத்து. இது எங்கே கட்சிகளை ஒழுங்கு படுத்தும்..
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
09-செப்-202115:30:12 IST Report Abuse
Anantharaman Srinivasan நம்நாட்டில் தேர்தல் ஆணையமே ஒரு கேலி கூத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X