பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 08, 2021 | கருத்துகள் (1)
Share
'மாநிலங்களில் நடந்த கொலைக்கும், பிரதமர் மோடிக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்...' என காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை: பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ், கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புரகி, சமூக செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், எவரும் கைது

பேச்சு, பேட்டி, அறிக்கை

'மாநிலங்களில் நடந்த கொலைக்கும், பிரதமர் மோடிக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்...' என காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை: பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ், கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புரகி, சமூக செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், எவரும் கைது செய்யப்படவில்லை. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா; மோடியின் காவி ஆட்சி நடக்கிறதா?


'இட ஒதுக்கீடே வேண்டாம் என்பர்; நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா...' என, மடக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார் அறிக்கை
: ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என வலியுறுத்துவோர், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் எனக் குரல் கொடுப்பரா?

'மொட்டைக்கு கட்டணம், 10 அல்லது 20 ரூபாய் தான் இருக்கும். அதை ரத்து செய்வதற்குப் பதில், சிறப்பு தரிசனம் என்ற பெயரில், 50 - 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதை தடை செய்தால் நன்றாக இருக்கும். தொகை குறைவாக இருப்பதால் கிண்டல் செய்கின்றனரோ...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: கோவில்களில் மொட்டை போடுவதற்கான கட்டணத்தை, தமிழக அரசு ரத்து செய்துள்ளதை பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., தலைவர்கள் கேலி செய்கின்றனர். இதிலிருந்தே ஏழை ஹிந்துக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை என்பது உறுதியாகிறது.


'முன்னாள் பிரதமரின் மகனான இவர், ஒழுங்காக பள்ளி சென்று, கவனமாக தேர்வு எழுதி, நேர்மையாக வெற்றி பெற்றிருப்பார் என யாரும் நம்ப மாட்டார்கள்...' என, கூறத் தோன்றும் வகையில் தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'நீட்' தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்கிறார் காங்., - எம்.பி., ராகுல். பள்ளிகள் திறந்து மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்கும் இந்த நேரத்திலும் தேர்வு வேண்டாம் என்று சொல்கிறாரே; இவர் தேர்வு எழுதாமல் தான் தேர்வு பெற்றாரோ?'இந்த கொடூர குற்றத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
டில்லியில் காவல் அதிகாரியாக பணியாற்றிய இஸ்லாமிய இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உடலில், 50க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள். பலர் கூட்டு சேர்ந்து வன்புணர்வு செய்துள்ளனர். பெண்களுக்கு, அதுவும் காவல் துறை பெண்ணுக்கே பாதுகாப்பில்லை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X