பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 08, 2021
Share
Advertisement
செப்., 9, 2005கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில், 1924 ஜூன் 26ம் தேதி பிறந்தவர் இளையபெருமாள். பள்ளியில் படிக்கும் போதே தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தினார். 1945ல், ராணுவத்தில் பணியாற்றினார். தமிழகத்தில் நிகழ்ந்த ஜாதி கொடுமைக்கு எதிராக பல்வேறு போராட்டம் நடத்தி சிறை சென்றார்.நாட்டின் சுதந்திரத்திற்கு பின், இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவராக

இதே நாளில் அன்று


செப்., 9, 2005



கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில், 1924 ஜூன் 26ம் தேதி பிறந்தவர் இளையபெருமாள். பள்ளியில் படிக்கும் போதே தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தினார். 1945ல், ராணுவத்தில் பணியாற்றினார். தமிழகத்தில் நிகழ்ந்த ஜாதி கொடுமைக்கு எதிராக பல்வேறு போராட்டம் நடத்தி சிறை சென்றார்.நாட்டின் சுதந்திரத்திற்கு பின், இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவராக இளையபெருமாள் நியமிக்கப்பட்டார்.

இவரின் முயற்சியால் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றினார்.கடந்த 1952 முதல் 1967 வரை தொடர்ந்து மூன்று முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ல் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் பணியாற்றினார்.சுவாமி சகஜானந்தாவின் சீடரான இவர், அவரது மறைவிற்கு பின், 'நந்தனார்' கல்வி கழகத்தை தொடர்ந்து நடத்தினார். 2005 செப்., 9ம் தேதி தன் 81வது வயதில் இயற்கை எய்தினார்.'தென்னாட்டு அம்பேத்கர்' இளையபெருமாள் காலமான தினம் இன்று!


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X