தடுப்பூசி வழங்கும் பணி: கோர்ட் பாராட்டு

Updated : செப் 10, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : 'பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையிலும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்குவதற்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி நாடு முழுதும் தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், 'ஏழை, எளிய
தடுப்பூசி வழங்கும் பணி: கோர்ட் பாராட்டு

புதுடில்லி : 'பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையிலும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்குவதற்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணி நாடு முழுதும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், 'ஏழை, எளிய மக்கள், முதியோர், ஊனமுற்றோர் என, பல்வேறு தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதை விசாரித்த நீதிபதிகள், டி.ஒய். சந்திரசூட், விக்ரம் நாத், ஹீமா கோஹ்லி அமர்வு கூறியுள்ளதாவது:


நம் நாடு பரப்பளவில் பெரியது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரச்னை உள்ளது. லடாக்கில் உள்ள நிலைமையும், கேரளாவில் உள்ள நிலைமையும் வேறு வேறு. உத்தர பிரதேசத்தில் உள்ள பிரச்னைகள் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டது.நகரங்களுக்கும், கிராமங் களுக்கும் வித்தியாசம் உள்ளது. இவ்வாறு பன்முக தன்மை கொண்ட நம் நாட்டில், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்க வாய்ப்புஇல்லை, நடைமுறை சாத்தியமும் இல்லை.
பல்வேறு பிரச்னைகள் இருந்த நிலையிலும், தடுப்பூசி வழங்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இதுவரை 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, குறைந்தபட்சம் ஒரு, 'டோஸ்' வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி எவ்வளவு சிரமமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இது நிர்வாக ரீதியிலானது. தற்போது உள்ள கொள்கையை நிறுத்தும்படி உத்தரவிட முடியாது. நீங்கள் விரும்பினால், உங்களுடைய கோரிக்கையை மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம்.
அந்தக் கோரிக்கையை கவனிக்கும்படி, மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அந்தத் துறையினர் எவ்வளவு பிரச்னையில் உள்ளனர் என்பது தெரியுமா. தடுப்பூசி வழங்குவதோடு, ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்வது என, கடுமையாக உழைக்கின்றனர்.இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-202122:25:48 IST Report Abuse
theruvasagan அது மட்டுமில்ல யுவர் ஹானர். அது மோடி வாக்சின். போட்டுக்காதீங்க. போட்டுக்கொண்டால் பரலோகம்தான்னு இங்க எத்தினி பேர் மக்கள் மத்தியில பொய்களையும் பீதிகளையும் பரப்பினாங்க என்ற கேவலத்தையும் நாட்டுமக்களுக்கு சொல்லுங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-செப்-202110:20:35 IST Report Abuse
duruvasar ஸ்டாலின் அய்யா அவர்கள் கொடுத்த அழுதத்தத்தைப்பற்றி ஒரு வரி குறிப்பிட்டிருக்கலாம். தமிழன் தலைநிமிர்வதை ஒத்துக்கொள்ள மறுக்கும் நிலை மாறவேண்டும். ஸ்டிக்கர்கள் எதிர்பார்த வெற்றியை தரவில்லை என தெரிகிறது. விழிப்புணர்வு பிராசாரத்தை தயா இன்னும் உக்கிரமாக முன்னெடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தன்மான தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-செப்-202110:03:40 IST Report Abuse
duruvasar ஸ்டாலின் அய்யா அவர்கள் கொடுத்த அழுதத்தத்தைப்பற்றி ஒரு வரி குறிப்பிட்டிருக்கலாம். தமிழன் தலைநிமிர்வதை ஒத்துக்கொள்ள மறுக்கும் நிலை மாறவேண்டும். ஸ்டிக்கர்கள் எதிர்பார்த வெற்றியை தரவில்லை என தெரிகிறது. விழிப்புணர்வு பிராசாரத்தை தயா இன்னும் உக்கிரமாக முன்னெடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X