பொது செய்தி

இந்தியா

அஷ்வின், வருணுக்கு வாய்ப்பு 'டுவென்டி-20' உலக கோப்பை அணியில்...

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:'டுவென்டி-20' உலக கோப்பை அணியில் அஷ்வின், வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐ.சி.சி., உலக கோப்பை 'டுவென்டி-20' தொடர் வரும் அக். 17-நவ. 14ல் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக வீரர்கள் எண்ணிக்கை 23க்குப் பதில் 30 வரை (பயிற்சியாளர்கள் உட்பட) தேர்வு செய்ய ஐ.சி.சி., அனுமதித்தது. இதில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. 15 பேர் கொண்ட

புதுடில்லி:'டுவென்டி-20' உலக கோப்பை அணியில் அஷ்வின், வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.



latest tamil news


ஐ.சி.சி., உலக கோப்பை 'டுவென்டி-20' தொடர் வரும் அக். 17-நவ. 14ல் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக வீரர்கள் எண்ணிக்கை 23க்குப் பதில் 30 வரை (பயிற்சியாளர்கள் உட்பட) தேர்வு செய்ய ஐ.சி.சி., அனுமதித்தது. இதில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது.

15 பேர் கொண்ட அணிக்கு கேப்டனாக கோஹ்லி, துணைக் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளனர். லோகேஷ் ராகுல், இலங்கை தொடரில் அசத்திய சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷாப் பன்ட், இஷான் கிஷான் இடம் பெற்றனர். 'ஆல் ரவுண்டர்' இடத்துக்கு ஹர்திக் பாண்ட்யா தேர்வானார்.


அஷ்வின் வருகை

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்ட சுழல் வீரர் அஷ்வின், வருண் சக்ரவர்த்தி என தமிழக வீரர்கள் இருவருக்கு இடம் கிடைத்தது. தவிர சுழலில் ஜடேஜா, ராகுல் சகார், அக்சர் படேல் தேர்வாகினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சகாலுக்கு இடம் கிடைக்கவில்லை. வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டனர்.


மாற்று வீரர்கள்

தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து தொடரில் அசத்தும் ஷர்துல் தாகூர், தீபக் சகார் என மூன்று பேர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், தமிழகத்தின் நடராஜன், பிரித்வி ஷா தேர்வு செய்யப்படவில்லை.


latest tamil news




ஆலோசகர் தோனி

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி. 2007ல் 'டுவென்டி-20', 2011ல் ஒருநாள் என இரு உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தவர். கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்திய அணி ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.



அணி விபரம்

கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பன்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ராகுல் சகார், அஷ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
09-செப்-202109:44:48 IST Report Abuse
M  Ramachandran எங்கள் யேகோபித்த ஆதரவு தினமலர் செய்தி நிறுவனத்திற்கு உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X