'அனைத்து கொரோனா மரணங்களுக்கும் அலட்சியமே காரணமல்ல'

Updated : செப் 10, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா இரண்டாவது அலையில் ஏற்பட்ட அனைத்து மரணங்களுக்கும், சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட அலட்சியம் தான் காரணம் என கருத முடியாது' என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட அலட்சியத்தால் தான், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் இறந்தனர் என முடிவெடுத்து, அவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி, உச்ச
'அனைத்து கொரோனா மரணங்கள், அலட்சிம், காரணமல்ல

புதுடில்லி:'கொரோனா இரண்டாவது அலையில் ஏற்பட்ட அனைத்து மரணங்களுக்கும், சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட அலட்சியம் தான் காரணம் என கருத முடியாது' என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட அலட்சியத்தால் தான், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் இறந்தனர் என முடிவெடுத்து, அவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் தீபக் ராஜ் சிங் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், ஹீமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:கொரோனா இரண்டாவது அலையில் இறந்தோர் அனைவரும், சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட அலட்சியத்தால் தான் இறந்தனர் என, நீதிமன்றம் கருத முடியாது.

ஏனெனில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம், ஒரு கட்டத்தில் நாடு முழுதும் மிக மிக அதிகமாக இருந்தது. மேலும், 'கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தின ருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை, ஆறு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும்' என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 30ல் உத்தரவிட்டு உள்ளது.இந்த வழிகாட்டுதல்கள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. வழிகாட்டுதல்கள் வெளியான பின், அதில் கருத்து வேறுபாடுகள் இருந்தால், மனுதாரர் சம்பந்தப்பட்ட அமைப்பை அணுகலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
09-செப்-202123:09:17 IST Report Abuse
Mohan அலட்சியமே காரணமல்ல, அரசும் அரசியலுமே காரணம்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
09-செப்-202121:17:45 IST Report Abuse
S. Narayanan இதை அலட்சியம் என்று கூற முடியாது. கொரோனாா பற்றிய முழு விவரங்களும் மக்களை சென்று அடைய வில்லை. அதற்கான தடுப்பூசி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வழங்க முடியாது. மேலும் தடுப்பூசிகளை pottukkolvathil மக்களிடம் இருந்த தயக்கம் இப்படி பல விஷயங்கள் இருப்பதை பார்க்க வேண்டும்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
09-செப்-202118:46:54 IST Report Abuse
 Muruga Vel காபூல்ல யாருக்காவது கொரோனா வந்திருக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X