சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பிளாஸ்டிக் தரும் ஆக்சிஜன்அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் நன்னீர் ஏரியில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்களால் அங்கு ஆக்சிஜன் அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக இங்கி லாந்தின் கினிபெர்ஸ்லேவில் உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களை கொட்டினர். அடுத்த ஆறு வாரத்தில் நீர்த்

அறிவியல் ஆயிரம்

பிளாஸ்டிக் தரும் ஆக்சிஜன்


அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் நன்னீர் ஏரியில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்களால் அங்கு ஆக்சிஜன் அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக இங்கி லாந்தின் கினிபெர்ஸ்லேவில் உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களை கொட்டினர். அடுத்த ஆறு வாரத்தில் நீர்த் தேக்கத்தில் ஏரியின் அடியில் படியும் பிளாஸ்டிக் துகள்கள் நுண்ணிய பாசிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறுகிறது. இவை கார்பன்-டை-ஆக்சைடை மாற்றி ஆக்சிஜனாக உற்பத்தி செய்கிறது என கண்டறிந்தனர்.

தகவல் சுரங்கம்

ஏழு நாடுகளை கடக்கும் ஆறு


ஆப்ரிக்காவில் நைல் நதிக்கு அடுத்து இரண்டாவது பெரியது காங்கோ ஆறு. அதிக கன அளவு நீரை கொண்டு செல்வதில் அமேசான் ஆறுக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய ஆறாக உள்ளது. காங்கோ ஆற்றின் அதிகபட்ச ஆழம் 720 அடி. இதுவே உலகின் ஆழமான ஆறு. இதன் நீளம் 4700 கி.மீ. இந்த ஆற்றின் நீர்பிடிப்பு பரப்பளவு 40 லட்சம் சதுர கி.மீ., இது ஆப்ரிக்காவின் மொத்த நிலப்பரப்பில் 13 சதவீதம். அட்லாண்டிக் கடலில் கலக்கிறது. மத்திய ஆப்ரிக்காவில் அங்கோலா, கேமரூன், காங்கோ, தான்சானியா உட்பட ஏழு நாடுகள் வழியாக இந்த ஆறு பாய்ந்து செல்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X