நல்லாட்சி தரும் தலிபான்!| Dinamalar

நல்லாட்சி தரும் தலிபான்!

Added : செப் 08, 2021 | கருத்துகள் (1)
Share
நல்லாட்சி தரும் தலிபான்!ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினர், மனித உரிமைகளை மதித்து, இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி, நல்லாட்சி வழங்குவர் என நான் நம்புகிறேன். அவர்கள் ஒவ்வொரு நாட்டுடனும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்.பரூக் அப்துல்லாதலைவர், தேசிய மாநாட்டு கட்சிபழிவாங்கும் அரசியல்!இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, புலனாய்வு
 நல்லாட்சி தரும் தலிபான்!

நல்லாட்சி தரும் தலிபான்!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினர், மனித உரிமைகளை மதித்து, இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி, நல்லாட்சி வழங்குவர் என நான் நம்புகிறேன். அவர்கள் ஒவ்வொரு நாட்டுடனும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்.

பரூக் அப்துல்லா

தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

பழிவாங்கும் அரசியல்!

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, புலனாய்வு அமைப்புகளால் திரிணமுல் காங்., தலைவர்களுக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டு வருகிறது. பழிவாங்கும் அரசியலை செய்து வரும் பா.ஜ.,வின் சதியால், நான் மீண்டும் தேர்தலை சந்திக்கிறேன்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

கட்சிக்கு நன்மை பயக்கும்!

பஞ்சாப் மக்கள், தங்கள் கருத்துகளை அழுத்தமாக பதிவிடுவர். அதைப் பார்க்க சண்டையிடுவது போல் தெரிந்தாலும், அவர்கள் தீர்வு காணவே அவ்வாறு செய்கின்றனர். அமரீந்தர் - சித்து இடையே பிரச்னை இருக்குமானால், அது கட்சிக்கு நன்மைதான் செய்யும்.

ஹரிஷ் ராவத்

மூத்த தலைவர், காங்.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X