சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அவசியம்!

Added : செப் 08, 2021
Share
Advertisement
பல் ஆரோக்கியம் குறித்து கூறும், பல் மற்றும் ஈறு சிகிச்சை மருத்துவர் பிரியா பிரபாகர்: உலக அளவில் 350 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு, பல் சார்ந்த பிரச்னைகள் உள்ளன. இப்பிரச்னைகளை எளிதில் தடுக்கவும், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையளிக்கவும் முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால் பெரும்பாலானோர், தாங்க முடியாத வலி ஏற்படும் போது தான் மருத்துவரிடம் செல்கின்றனர். வாய்
சொல்கிறார்கள்

பல் ஆரோக்கியம் குறித்து கூறும், பல் மற்றும் ஈறு சிகிச்சை மருத்துவர் பிரியா பிரபாகர்: உலக அளவில் 350 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு, பல் சார்ந்த பிரச்னைகள் உள்ளன. இப்பிரச்னைகளை எளிதில் தடுக்கவும், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையளிக்கவும் முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

ஆனால் பெரும்பாலானோர், தாங்க முடியாத வலி ஏற்படும் போது தான் மருத்துவரிடம் செல்கின்றனர். வாய் சுகாதாரம் கடைப்பிடிக்காதது, ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம், இனிப்பு அதிகம் சாப்பிடுவது, புகையிலை, மதுப் பழக்கம் போன்றவை, பல் பிரச்னைகளுக்கான பொதுவான காரணங்களாகும்.முகம் பார்க்கும் கண்ணாடி அல்லது மொபைல்போனின் முன்பக்க 'கேமரா'வை, 'ஆன்' செய்து, வெளிச்சமான இடத்தில் நின்று பற்களைப் பரிசோதிக்கலாம்.வாயின் மேற்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி இரண்டிலும், பின்வரிசையிலிருந்து முன்வரிசை வரை பொறுமையாக பரிசோதிக்க வேண்டும். பல் சொத்தை இருந்தால் பற்களின் மேல் பகுதியில் உணவு ஒட்டிக் கொள்ளலாம். பற்களின் மேல் கறுப்பாகக் காணப்பட்டால், பல்சொத்தை என அர்த்தம்.பற்களைக் கடிக்கும் போது வலி ஏற்பட்டால், பல் சொத்தை வேர் வரை பாதித்திருக்கக் கூடும். மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் பற்களில் கறை படிந்திருப்பது, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உள்ளதை குறிக்கிறது. பற்களின் வெளிப்புறத்தில் வெள்ளை நிறத்தில் மெழுகு போன்ற படிவம் படிந்திருப்பது, ஈறுகளின் உள்ளே அழுக்கு சேர்ந்திருப்பதன் அறிகுறியாகும்.'பிரஷ்' செய்யும் போதும், ஆப்பிள் போன்ற எதையாவது கடிக்கும் போதும் ரத்தக்கசிவு ஏற்பட்டால், ஈறு பிரச்னையின் முதல் நிலையாக இருக்கலாம்.பற்களில் பாக்டீரியா தொற்றை அலட்சியம் செய்தால் ஈறுகள், எலும்பை பாதித்து, பல் ஆட ஆரம்பித்து விடும். பல் சொத்தைக்கு முதல் அறிகுறி பல்கூச்சம். ஈறு இறங்கினாலோ, பற்கள் தேய்ந்திருந்தாலோ கூட, பல் கூச்சம் ஏற்படலாம்.
சாப்பிடும்போது மட்டுமே வலித்து, அதன்பின் சரியாகி விட்டால், சொத்தையானது அடைக்கிற நிலையில் உள்ளதாக அர்த்தம். -இரவில் அதிகரிக்கும் பல் வலி, வீக்கம் போன்றவை பல்லை எடுக்க வேண்டும் அல்லது வேர் சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்கான அறிகுறி.பிரச்னையைக் கண்டறிந்ததும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பற்களின் ஆரோக்கியம், ஆயுளை காப்பாற்றலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X