தேசிய ராணுவ அகாடமியில் பெண்களை அனுமதிக்க முடிவு

Updated : செப் 10, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:தேசிய ராணுவ அகாடமியில் பெண்களையும் இணைத்துக்கொள்ள, பாதுகாப்பு படைகள் அனுமதி அளித்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.முப்படைகளில் பணியில் சேர, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தேசிய ராணுவ அகாடமி தேர்வு நடத்தப்படுகிறது. பாலின பாகுபாடுசமீபத்தில் இத்தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல
தேசிய ராணுவ அகாடமி, பெண்கள், அனுமதிக்க முடிவு

புதுடில்லி:தேசிய ராணுவ அகாடமியில் பெண்களையும் இணைத்துக்கொள்ள, பாதுகாப்பு படைகள் அனுமதி அளித்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

முப்படைகளில் பணியில் சேர, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தேசிய ராணுவ அகாடமி தேர்வு நடத்தப்படுகிறது. பாலின பாகுபாடுசமீபத்தில் இத்தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், தேசிய ராணுவ அகாடமி தேர்வு எழுத ஆண்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும், அதே தகுதி உள்ள பெண்களுக்கு அந்த தேர்வை எழுத அனுமதி வழங்கப்படுவது இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது, பாலின சமத்துவத்துக்கு எதிரான நடவடிக்கையாக உள்ளதாக கூறி, இந்த ஆண்டு தேசிய ராணுவ அகாடமி தேர்வை எழுதுவதற்கு பெண்களுக்கும் அனுமதியளிக்க கோரிக்கை வைக்கப் பட்டது.இந்த மனுவை, கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்வு எழுதுவதில் பாலின பாகுபாடு பார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று, நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.எதிர்பார்க்கக் கூடாதுஅப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி கூறியதாவது:தேசிய ராணுவ அகாடமியில் தகுதியுள்ள பெண்களையும் இணைத்துக்கொள்ள, பாதுகாப்பு படைகள் முடிவு செய்து உள்ளன; இது விரைவில் செயல்படுத்தப்படும்.

எனினும், சில உட்கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டி இருப்பதால், இந்த ஆண்டு நடக்கும் தேசிய ராணுவ அகாடமி தேர்வு வழக்கம்போல் நடக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:

பாதுகாப்பு படைகளின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுங்கள். இதன் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது. பாதுகாப்பு படையினர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சுயமாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நீதிமன்ற உத்தரவை எதிர்பார்க்கக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-செப்-202106:28:19 IST Report Abuse
Kasimani Baskaran எதற்குத்தான் நீதிமன்றம் செல்வது என்ற ஒரு வரைமுறை வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X