வெடிபொருளுடன் கார்: நீதாவின் பயணம் ரத்து

Added : செப் 08, 2021
Share
Advertisement
மும்பை:முகேஷ் அம்பானி வீட்டிற்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த நாளன்று, அவரது மனைவி நீதா அம்பானி குஜராத் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வெளியே,
 வெடிபொருளுடன் கார்: நீதாவின் பயணம் ரத்து

மும்பை:முகேஷ் அம்பானி வீட்டிற்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த நாளன்று, அவரது மனைவி நீதா அம்பானி குஜராத் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வெளியே, கடந்த பிப்ரவரி மாதம் வெடிபொருட் களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கைது



பின், இந்த வழக்கை விசாரிக்கத் துவங்கிய என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர், போலீஸ் உதவி இன்ஸ்பெக்டராக இருந்த சச்சின் வாஸே என்பவரை கைது செய்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தான் காரை அங்கு நிறுத்திவிட்டுச் சென்றது தெரியவந்தது. பின், வாஸே பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த வாரம் குற்றப் பத்திரிகையை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸே உட்பட 10 பேரின் பெயர்கள் அந்த குற்றப் பத்திரிகை யில் குறிப்பிடப்பட்டு உள்ளன.


ரத்து

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, இந்த சம்பவம் நடந்த தினத்தன்று, குஜராத்தின் ஜாம்நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும், பின் காவல் துறையின் ஆலோசனைக்கு பின், அந்த திட்டத்தை அவர் ரத்து செய்ததாகவும் தெரியவந்துள்ளது.மேலும், அம்பானி குடும்பத்திற்கு பல கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருப்பதாகவும், அவை அனைத்தும் விவசாயிகள் போராட்டம் சார்ந்தவை என்றும் அம்பானி வீட்டின் தலைமை பாதுகாவலர் தெரிவித்த தாக குறிப்பிடப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X