அசாம் முதல்வருடன் பேச தயார் உல்பா அமைப்பினர் அறிவிப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
கவுஹாத்தி:'அமைதிப் பேச்சு நடத்த, அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மாவை மத்திய அரசு நியமித்தால், அதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை' என, தடை செய்யப்பட்ட உல்பா - தனி - பயங்கரவாத அமைப்பின் தலைவர் தெரிவித்து உள்ளார்.அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இவர் முதல்வராக பொறுப்பேற்றவுடன், 'உல்பா பயங்கரவாதிகள் வன்முறையை கைவிட்டு பேச்சுக்கு முன்வர

கவுஹாத்தி:'அமைதிப் பேச்சு நடத்த, அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மாவை மத்திய அரசு நியமித்தால், அதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை' என, தடை செய்யப்பட்ட உல்பா - தனி - பயங்கரவாத அமைப்பின் தலைவர் தெரிவித்து உள்ளார்.

அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இவர் முதல்வராக பொறுப்பேற்றவுடன், 'உல்பா பயங்கரவாதிகள் வன்முறையை கைவிட்டு பேச்சுக்கு முன்வர வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.இதையடுத்து உல்பா பயங்கரவாதிகள் கடந்த மே மாதம் போர் நிறுத்தம் அறிவித்தனர்.

இந்நிலையில், மாநில அரசுடனான அமைதி பேச்சு குறித்து, உல்பா - தனி - அமைப்பின் தலைவர் பரேஷ் பரூவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஹிமந்தா சர்மா முதல்வராக பதவி ஏற்றது முதல், மாநிலத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க முயற்சிப்பேன் என தொடர்ந்து கூறி வருகிறார். இங்கு பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற உண்மையான அக்கறை அவரது பேச்சில் தெரிகிறது.

அமைதிப் பேச்சு நடத்த முதல்வர் ஹிமந்தாவை மத்திய அரசு நியமித்தால் அதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. பேச்சு நடத்துவதற்கு தகுதி வாய்ந்த நபர் அவர். பிரச்னையின் வரலாற்று பின்னணி குறித்து நன்கு அறிந்தவர். எனவே, 42 ஆண்டுகால பிரச்னைக்கு அவரால் தீர்வு காண முடியும் என நம்புகிறோம்

.உல்பா அமைப்பினரின் போராட்டம் குறித்து முதல்வருக்கு நன்றாகவே தெரியும். எனவே அதன் வரலாற்று பின்னணி குறித்து மத்திய அரசிடம் விரிவாக எடுத்துரைக்க அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X