பொது செய்தி

இந்தியா

5 மாநில சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ., வியூகம்

Updated : செப் 10, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (5+ 8)
Share
Advertisement
உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடக்க உள்ளது. அதற்கு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ., இப்போதே தயாராகி வருகிறது. இதையடுத்து, உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும், தேர்தல் பொறுப்பாளர்களாக, 13 மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், மூத்த நிர்வாகிகளை, கட்சி தலைமை நியமித்துள்ளது.உத்தர பிரதேசம்,
5 மாநில சட்டசபை தேர்தல், பா.ஜ., வியூகம்!

உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடக்க உள்ளது. அதற்கு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ., இப்போதே தயாராகி வருகிறது.

இதையடுத்து, உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும், தேர்தல் பொறுப்பாளர்களாக, 13 மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், மூத்த நிர்வாகிகளை, கட்சி தலைமை நியமித்துள்ளது.உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளன.

இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், கடந்த 2017ல் நடந்த தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி, பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. இதே மாநிலத்தில் 2019ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.,வின் ஆதிக்கம் தொடர்ந்தது.

இந்நிலையில் உ.பி.,யில், வரும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைப்பதை பா.ஜ., பெரும் கவுரவமாக கருதுகிறது. லோக்சபாவுக்கு 2024ல் நடக்கவிருக்கும் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் உ.பி., தேர்தல் முடிவு இருக்கும் என, பா.ஜ., கருதுகிறது.தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களில், உ.பி.,க்கு அடுத்தபடியான பெரிய மாநிலமாக பஞ்சாப் உள்ளது.


சற்று பலவீனம்



இங்கு, முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, 2019 லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தற்போது, விவசாய சட்டங்களை முன்வைத்து அகாலி தளம், தே.ஜ., கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்ட நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின், பஞ்சாபில் பா.ஜ., தனித்து போட்டியிட உள்ளது.
இது பா.ஜ.,வுக்கு சற்று பலவீனம் தான். இந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கப் போவது விவசாயிகள் போராட்டம் தான். இந்த மாநிலங்களில் தான் விவசாயிகளின் போராட்டம் மிகத் தீவிரமாக இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக, கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக, டில்லி எல்லையில் விவசாய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தில், உ.பி., பஞ்சாப், ஹரியானா
மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளதால் பரபரப்பு கூடி வருகிறது.இதையடுத்து, விவசாயிகள் பிரச்னையை எதிர்கொண்டு, உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை பா.ஜ., வகுக்க துவங்கிஉள்ளது, அதன் ஒரு கட்டமாக, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை கட்சி மேலிடம் டில்லியில் நேற்று அறிவித்தது. அதன் விபரம்: உ.பி., மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்குர், அர்ஜூன் ராம் மேக்வால், அன்னபூர்ண தேவி, சோபா கரன்ட் லாஜே ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.பெரிய மாநிலம் என்பதால், உ.பி., பிராந்திய ரீதியாகவும் பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள்
நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

பா.ஜ., முனைப்பு

பஞ்சாப் மாநில பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, மீனாட்சி லேகி மற்றும் எம்.பி., வினோத் சாவ்டா ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்உத்தரகண்ட் மாநில பொறுப்பாளர்களாக, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பா.ஜ, மூத்த தலைவர் ஆர்.பி. சிங், மேற்கு வங்க எம்.பி., லோகேட் சட்டர்ஜி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநில பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக, அசாம் மாநில அமைச்சர் அசோக் சிங்கால், மத்திய அமைச்சர் பிரதீமா பவுமிக் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவா மாநிலத்தின் பொறுப்பாளராக, மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரோடு, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டியும், தர்ஷனா ஜார்டோஷ் இணைப் பொறுப்பாளர்களாக செயல்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் உருவானது முதல், அங்கு பா.ஜ.,வும், காங்கிரசும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன.இம்முறை அதைமாற்றி ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ., உள்ளது.கோவாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. கோவாவில் பா.ஜ., ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்த, முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கர் இறந்து விட்ட நிலையில், சட்டசபை தேர்தலை பா.ஜ., சந்திக்க உள்ளது. - நமது டில்லி நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (5+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
09-செப்-202117:27:51 IST Report Abuse
sankaseshan மோடி எதிர்ப்பாளர்கள் இப்பவே கதற ஆரம்பிச்சாச்சு திமுக அடிமைகளே சொல்லுங்க எப்பவாவது கூட்டணி வைக்காமல் ஜெயிச்சிருக்கா
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-செப்-202116:58:50 IST Report Abuse
Pugazh V 13 ஒன்றிய அமைச்சர் களின் ஆபீஸ்களுக்கு தேர்தல் பணி. மக்கள் பணி எல்லாம் அப்புறம் தான். இதை நல்ல ஆட்சி என்று எழுத சிலர். ஹூம்.. 13 அல்ல 23 அமைச்சர் கள் போனாலும்.. இந்த முறை வெற்றி சந்தேகம் தான்.
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
09-செப்-202112:13:32 IST Report Abuse
radha இந்த சங்கிகளுக்கு இதுக்கு மட்டும்தான் ரெடியாகத் தெரியும். இன்னும் ஜீ ஜிய கைல பிடிக்க முடியாது. வூர் வூரா சுத்திக்கிட்டே ஹை ஹேன்னு கத்திகிட்டே இருப்பாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X