'வன்முறை கலாசாரத்தை பாக்., ஊக்குவிக்கிறது'

Added : செப் 08, 2021
Share
Advertisement
நியூயார்க்:'உள்நாட்டிலும், எல்லை பகுதிகளிலும் பாகிஸ்தான் வன்முறை கலாசாரத்தை ஊக்குவித்து வருகிறது' என இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் விதிஷா மைத்ரா பேசியதாவது: உள்நாட்டிலும், எல்லை பகுதிகளிலும் பாகிஸ்தான் வன்முறை கலாசாரத்தை துாண்டி

நியூயார்க்:'உள்நாட்டிலும், எல்லை பகுதிகளிலும் பாகிஸ்தான் வன்முறை கலாசாரத்தை ஊக்குவித்து வருகிறது' என இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் விதிஷா மைத்ரா பேசியதாவது: உள்நாட்டிலும், எல்லை பகுதிகளிலும் பாகிஸ்தான் வன்முறை கலாசாரத்தை துாண்டி வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவிற்கு எதிராக வெறுப்பை பரப்ப ஐ.நா., சபையை தவறாக பயன்படுத்த, பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இத்தகைய முயற்சிகளை, நாங்கள் ஏற்கவில்லை. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

சகிப்புத்தன்மையின்மை மற்றும் வன்முறையின் வெளிப்பாடாகவே, பயங்கரவாதம் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இவை, மதங்கள், கலாசாரத்திற்கு எதிரானவை. மதத்தை பயன்படுத்தி, இச்செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் பயங்கரவாதிகள் குறித்தும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் குறித்தும், உலகம் கவலைப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X