பொது செய்தி

இந்தியா

இந்தியா - வங்க தேச அமைச்சர்கள் சந்திப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுடில்லி:இந்தியா - வங்கதேச நாடுகளின் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்கள் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர்.வங்கதேச தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத், அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்து உள்ளார். தலைநகர் டில்லிக்கு வந்த அவர், நம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குரை நேற்று சந்தித்துப்

புதுடில்லி:இந்தியா - வங்கதேச நாடுகளின் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்கள் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர்.

வங்கதேச தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத், அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்து உள்ளார். தலைநகர் டில்லிக்கு வந்த அவர், நம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குரை நேற்று சந்தித்துப் பேசினார்.அந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, இருவரும் ஆலோசித்தனர். மேலும், இருநாட்டு மக்கள் தொடர்பை வலுப்படுத்துவது குறித்தும், இருநாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

வங்கதேசத்தின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமர் ஷேக் ஹசினாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் படம் குறித்தும், அதில் ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆவணப் படத்தை, அடுத்த ஆண்டு, மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X