பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு களப்பணியில் மாணவர்கள்

Added : செப் 08, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறையில், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா மூன்றாவது அலை நெருங்காமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில், அரசு கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, வீடு வீடாக சென்று, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.நகராட்சி
 கொரோனா விழிப்புணர்வு களப்பணியில் மாணவர்கள்

வால்பாறை : வால்பாறையில், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா மூன்றாவது அலை நெருங்காமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில், அரசு கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, வீடு வீடாக சென்று, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கல்லுாரி மாணவர்கள் 90 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீடு, வீடாக சென்று, காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பும் போது, கை மற்றும் கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X