பொது செய்தி

தமிழ்நாடு

அத்திக்கடவு திட்ட நீரேற்று நிலைய பணிகள் 'ஜரூர்' ஜனவரியில் திறக்க முழு வேகம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
அன்னுார் : அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீரேற்று நிலைய பணிகள், அன்னுாரில் இரவு பகலாக நடக்கின்றன.அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, 60 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நீண்ட போராட்டத்தின் விளைவாக, 2019 டிசம்பரில் பணிகள் துவங்கின.துவக்கத்தில், 1,652 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பின்னர் திருத்திய மதிப்பீட்டில், 1,756 கோடியே 88 லட்சம் ரூபாய்

அன்னுார் : அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீரேற்று நிலைய பணிகள், அன்னுாரில் இரவு பகலாக நடக்கின்றன.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி, 60 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நீண்ட போராட்டத்தின் விளைவாக, 2019 டிசம்பரில் பணிகள் துவங்கின.துவக்கத்தில், 1,652 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பின்னர் திருத்திய மதிப்பீட்டில், 1,756 கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றில், காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே ஆண்டு ஒன்றுக்கு 1.5 டி.எம்.சி., உபரி நீர் எடுக்கப்பட்டு, நீரேற்றுமுறையில், குழாய் வழியாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 குளம் குட்டைகளில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக, காளிங்கராயன் அணைக்கட்டு அருகில், நல்லகவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி மற்றும் அன்னுார் அடுத்த குன்னத்துாராம்பாளையம் என, ஆறு இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

குன்னத்துாராம்பாளையத்தில் அமைக்கப்படும் நீரேற்று நிலையத்தில், இரு வாரங்களாக இரவு பகலாக பணிகள் நடக்கின்றன.85 சதவீதம்இதுகுறித்து அதிகாரிகள் கூறியாதாவது:இந்த திட்டத்தில், மொத்தமுள்ள, 260 கி.மீ., துாரம் குழாய் பதிக்க வேண்டியதில், 192 கி.மீ., துாரம் பதிக்கப்பட்டுவிட்டது.798 கி.மீ., பதிக்க வேண்டிய ஹெச்.டி.பி.இ., குழாய், 614 கி.மீ., துாரத்துக்கு பதிக்கப்பட்டு விட்டது. 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும், டிசம்பரில் பணிகளை முடித்து, ஜனவரியில் வெள்ளோட்டம் விடப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.குன்னத்துாராம் பாளையத்தில் நீரேற்று நிலைய பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள், திட்ட ஆர்வலர்கள் பலரும் தினமும், கூட்டம் கூட்டமாக நீரேற்று நிலையத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர்.தொய்வில்லைஅன்னுாரில், பிரதான குழாய் பதிக்கும் பணியும் வேகமாக நடக்கிறது.இதுகுறித்து திட்ட ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆட்சி மாறியபோதும், பணிகள் தொய்வின்றி நடக்கின்றன. இதே வேகம் தொடர்ந்தால், 4,5 மாதங்களில், குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து துவங்கி விடும். பல ஆயிரம் ஏக்கர் நிலம், தரிசாக மாறுவது தவிர்க்கப்படும். கால்நடை வளர்ப்பு அதிகரிக்கும். நிலத்தடி நீர்மட்டம், 1,500 அடிக்கு கீழ் சென்றது, இனி உயரும்' என, மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X