பொது செய்தி

இந்தியா

மொட்டை போடுவோரிடம் பணம் கேட்டால் பணி நீக்கம்

Updated : செப் 10, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை : 'முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம், பணம் கேட்கும் பணியாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.ஏலம்ஹிந்து சமய அறநிலையத் துறை இணை, துணை, உதவிக் கமிஷனர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கோவில்களில் முடி காணிக்கை வசூலிக்கப்பட மாட்டாது; முடி காணிக்கை செலுத்தும் நபர்
மொட்டை போடுவோர், பணம், பணி நீக்கம்

சென்னை : 'முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம், பணம் கேட்கும் பணியாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.


ஏலம்



ஹிந்து சமய அறநிலையத் துறை இணை, துணை, உதவிக் கமிஷனர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கோவில்களில் முடி காணிக்கை வசூலிக்கப்பட மாட்டாது; முடி காணிக்கை செலுத்தும் நபர் ஒருவருக்கு, 30 ரூபாய் என கணக்கிட்டும், அது நீங்கலாக, 5,000 ரூபாய் ஊக்கத் தொகையாக, சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முடி இறக்கும் பணியாளர்களுக்கான தொகையை, கோவில் நிர்வாகம் வாயிலாக வழங்க வேண்டும். அதனுடன் ஊக்கத் தொகையாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.முடி இறக்கும் பணிக்கு, கோவில் வாயிலாக கட்டணமில்லா சீட்டு, 'பிளேடு' ஆகியவை வழங்கப்பட வேண்டும். அதே சமயம், முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம், எந்த கட்டணமும் முடி இறக்கும் பணியாளர்கள் கோரக்கூடாது.

அவ்வாறு பணம் கேட்கும் பணியாளர்கள் மீது, காவல் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். சம்பந்தப்பட்டோரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவும். முடி இறக்கும் இடத்தில், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, எந்த புகாருக்கும் இடமளிக்காமல் கண்காணிக்க ேவண்டும்.கோவில் நிர்வாகம் வாயிலாக தொகை வழங்குவது, முடி இறக்கும் பணியை ஏலம் எடுத்தவர்களுக்கு பொருந்தாது.




அனுமதி



அதே நேரம், கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கா வண்ணம் கண்காணிக்க வேண்டும்.ஒழுங்கு நடவடிக்கை வாயிலாக பணிநீக்கம், உரிமம் ரத்து செய்யப்படும் நபர்களுக்கு பதிலாக, புதிய நபர்களை கோவில் நிர்வாகம் அனுமதிக்கலாம். எக்காரணம் கொண்டும் பணிநீக்கம், உரிமம் ரத்து செய்யப்பட்ட நபர்களை மீள் பணிமர்த்தம் செய்யக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-202122:57:25 IST Report Abuse
அப்புசாமி என்னது? ஒரு மொட்டைக்கு வெறும் முப்பது ரூவாயா? மொட்டை அடிப்பவர்களையே மொட்டையடித்து விடுவார்கள் போலிருக்கே...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
09-செப்-202122:00:16 IST Report Abuse
S. Narayanan மொட்டை அடிப்பவர் பணம் கேட்க மாட்டார் அவர் செய்கையில் உணர்த்துவார். அப்படி வாங்கும் பணத்திலும் திமுக கட்சி பணம் பிடுங்கி கொள்வான்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
09-செப்-202121:28:24 IST Report Abuse
sankaseshan தமிழ்நாட்டில் ஏகப்பட்ட இலவசங்கள் இப்போ மொட்டையும் இலவசம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X