பொது செய்தி

தமிழ்நாடு

கனிமவளத்துறை அதிகாரிகள் கண்ணில் மண்! காரமடையில் செங்கல் சூளைகள் அதிகரிப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், செங்கல் சூளைகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காரமடையில், சூளைகள் பெருகி வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் சூளைகள் விரிவுபடுத்தப்படுவதால், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.சின்னதடாகம் பகுதியில் ஐந்து ஊராட்சிகளில், 190 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. கொஞ்சமும்
 கனிமவளத்துறை அதிகாரிகள் கண்ணில்  மண்!    காரமடையில் செங்கல் சூளைகள் அதிகரிப்பு

மேட்டுப்பாளையம் : தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், செங்கல் சூளைகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காரமடையில், சூளைகள் பெருகி வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் சூளைகள் விரிவுபடுத்தப்படுவதால், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சின்னதடாகம் பகுதியில் ஐந்து ஊராட்சிகளில், 190 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. கொஞ்சமும் வரைமுறையற்று, மண் அள்ளப்பட்டதால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு, வனவிலங்குகளின் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக, புகார் எழுந்தது.தடைசென்னை ஐகோர்ட்டில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்குத் தடை கோரி வழக்குத் தொடர்ந்தனர். கோர்ட் உத்தரவின்பேரில், 190 செங்கல் சூளைகளுக்கு, கடந்த மார்ச்சில் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

செம்மண் தோண்டுதல், மண்ணை குவித்து வைத்தல், மண்ணை வாகனங்களில் எடுத்துச் செல்வது, செங்கல் உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.புற்றீசலாய்சின்ன தடாகத்தில், செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், காரமடை சுற்றுப்பகுதியில், புற்றீசல்கள் போல், செங்கல்சூளைகள் உருவாகியுள்ளன. மருதுார் ஊராட்சியில் கணுவாய்பாளையம், காளம்பாளையம் ஊராட்சியில் தாயனுார், தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள சூளைகளில், செங்கல் உற்பத்தியை அதிகரித்துள்ளனர்.செங்கல்லுக்கான தேவை அதிகரித்துள்ளதால், காரமடை பகுதியில், சிறிதாக இயங்கி வந்த, சூளைகள், விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதிகளவில் மண்ணைத் தோண்டி, செங்கல் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இதற்காக, காரமடை வட்டார பகுதிகளில் பட்டா நிலங்களில் மண்ணைத் தோண்டும் பணிகள் அதிகரித்து வருகின்றன.ஆய்வு தேவைவரம்புக்கு மீறி மண் எடுக்கப்படுகிறதா, முறையான அனுமதி பெற்று, செங்கல் சூளைகள் நடத்தப்படுகிறதா என, வருவாய்த்துறை கனிமவளத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், இணைந்து ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் குமாரிடம் கேட்டபோது, "காரமடை பகுதியில், செங்கல் சூளைக்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை. இருக்கின்ற சூளைகளை மூடுவதற்கு பணிகள் நடைபெறுகின்றன. காரமடை பகுதியில் இயங்கும் சூளைகள் குறித்து, தகவல் தெரிவிக்கும்படி, மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் கேட்டுள்ளோம்" என்றார்.மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா கூறுகையில், "காரமடை பகுதியில் செயல்படும் செங்கல் சூளைகள் குறித்து, மாவட்ட கனிமவளத்துறைக்கு, அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அத்துறை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுப்பார்கள்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X