பொது செய்தி

தமிழ்நாடு

வியக்க வைக்கும் குருவிக்கூடு

Added : செப் 08, 2021
Share
Advertisement
உடுமலை : பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மரம் ஒன்றில், அதிகப்படியான துாக்கணாங்குருவி கூடுகள் தொங்குவதை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.கிராமப்புறங்களில், குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை காணப்பட்டது. இவை, விளைநிலங்களில் நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை உணவாகக் கொண்டு, வீட்டு சுவர்களில் உள்ள பொந்துகள் மற்றும் பரண்களில், கூடுகள் கட்டி வாழ்ந்து
 வியக்க வைக்கும் குருவிக்கூடு

உடுமலை : பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மரம் ஒன்றில், அதிகப்படியான துாக்கணாங்குருவி கூடுகள் தொங்குவதை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

கிராமப்புறங்களில், குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை காணப்பட்டது. இவை, விளைநிலங்களில் நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை உணவாகக் கொண்டு, வீட்டு சுவர்களில் உள்ள பொந்துகள் மற்றும் பரண்களில், கூடுகள் கட்டி வாழ்ந்து வந்தன.ஆனால், கட்டடங்கள் பெருக்கம், மரங்கள் மற்றும் விளைநிலங்கள் அழிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் குருவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டன.

அவ்வாறு இருக்கையில், உடுமலை அடுத்த பெரியகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மரம் ஒன்றில், அதிகப்படியான துாங்கணாங்குருவி கூடுகள் தொங்குவது, மக்களை வியப்படையச் செய்துள்ளது. பலரும் ஆர்வத்துடன், கூடுகளைக்கண்டு ரசிக்கின்றனர்.பறவை ஆர்வலர்கள் கூறுகையில், 'தற்போதைய சூழலில், கிராமப்புறங்களில், துாக்கணாங்குருவி கூடுகளைப்பார்ப்பது அரிதாக உள்ளது. காய்ந்தபுல், வைக்கோல் உள்ளிட்டவைகளால் கூட்டை நெய்கிறது. இவை வசிக்கும் இடத்தில், 20 முதல், 30 கூடுகள் வரை இருக்கும். பசுமையை பாதுகாப்பதன் வாயிலாக, துாக்கணாங்குருவி இனத்தின் அழிவை தடுக்க முடியும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X