அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் சட்டசபையில் 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை:''தமிழ்நாடு ஆதி திராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பு, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் அமைக்கப்படும். ''அதற்கான சட்ட முன்வடிவு வரைவு, இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:* மாநில அளவில், ஆதிதிராவிடர்கள்,

சென்னை:''தமிழ்நாடு ஆதி திராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பு, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் அமைக்கப்படும். ''அதற்கான சட்ட முன்வடிவு வரைவு, இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* மாநில அளவில், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினரின் சட்டப்பூர்வ மான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதி திராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்' என்ற புதிய அமைப்பு அமைக்கப்படும்.தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் ஆணையத்தை உருவாக்க, அரசு சட்டம் இயற்றும். அதற்கான சட்ட முன்வடிவ வரைவு, இந்த சட்டசபை தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்

* ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத்திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி போன்றவை, பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும். பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்ந்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை வசமே இருக்கும்.

பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்புதல், பணி அமைப்பை நிர்வகித்தல், நிர்வாக பணிகளை கையாளுதல் போன்றவற்றை, அத்துறையே செயல்படுத்தும். பள்ளிக் கல்வித்துறை அவற்றில் தலையிடாது

* வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை, விரைவாக இறுதி செய்ய, தற்சமயம் தமிழகத்தில், 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேலும், நான்கு புதிய நீதிமன்றங்கள் அமைக்க, ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என, வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில், கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்

* வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை, சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்க தேவையான, விழிப்புணர்வு பயிற்சிகள், 'சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில், காவல் துறை, வருவாய் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படும்

* தமிழகத்தில், பல கிராமங்களில், ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் சிற்றுார்களுக்கு, ஊக்கத் தொகையாக, வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த, அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

* வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு, வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85 ஆயிரம் ரூபாயில் இருந்து, 8.25 லட்சம் ரூபாய் வரை, தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை குறைந்தபட்சம், 1 லட்சம் ரூபாய்; அதிகபட்சமாக, 12 லட்சம் ரூபாய், மாநில அரசு நிதி வழியே உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X