பரிகார பூஜை எனக் கூறி 15 சவரன் நகை அபேஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரிகார பூஜை எனக் கூறி 15 சவரன் நகை 'அபேஸ்'

Added : செப் 08, 2021
Share
குடியாத்தம்:பரிகார பூஜை செய்வதாக கூறி, இளம்பெண்ணிடம் 15 சவரன் நகையை, 'அபேஸ்' செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடியைச் சேர்ந்தவர் நரேஷ், 35; பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி அருணா, 28; கல்லப்பாடியில் வசித்து வருகிறார்.நேற்று காலை திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் உள்ள உறவினர்களை பார்த்து,

குடியாத்தம்:பரிகார பூஜை செய்வதாக கூறி, இளம்பெண்ணிடம் 15 சவரன் நகையை, 'அபேஸ்' செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடியைச் சேர்ந்தவர் நரேஷ், 35; பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி அருணா, 28; கல்லப்பாடியில் வசித்து வருகிறார்.நேற்று காலை திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் உள்ள உறவினர்களை பார்த்து, பஸ்சில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, பஸ்சில் வந்த 50 வயதுள்ளவர், அருணாவிடம், 'நான் காளி கோவில் பூசாரி, உன் வீட்டில் பேய் நடமாட்டம் உள்ளது. உன் கண்களை பார்த்து தெரிந்து கொண்டேன்.பரிகார பூஜை செய்து, பேயை விரட்டா விட்டால் உன் கணவர், தந்தை தேவேந்திரன் உயிருக்கு ஆபத்து' என கூறியுள்ளார்.அருணா குடும்பத்தினர் குறித்த விபரங்களை கூறியதால், அவரை நம்பி பரிகார பூஜை செய்ய அருணா சம்மதித்துள்ளார்.

அந்த நபர், 'குடியாத்தத்தில் உள்ள சிவன் கோவிலில் பரிகார பூஜை செய்து வழிபட்டால், உன் பிரச்னை சரியாகி விடும்' எனக் கூறினார்.இதனால், அவருடன் பரிகார பூஜை செய்ய அருணா சென்றார். கோவில் வளாகத்தில் அவரை அமர வைத்து, பூஜை செய்ய தாலி செயின், வளையல்களை கழற்றி கொடுக்கும்படி கூறியுள்ளார்.

அருணாவும், 15 சவரன் நகைகளை கழற்றி கொடுத்துள்ளார்.பரிகார பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்வதாக கூறி சென்றவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த அருணா, குடியாத்தம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X