விதி 110வது காப்பாற்றுமா? விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதி 110வது காப்பாற்றுமா? விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு

Added : செப் 09, 2021
Share
சூலுார் : எதிர்பார்த்திருந்த அறிவிப்புகள், மானியக் கோரிக்கையில் இடம் பெறாததால், விசைத்தறியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர், பல கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி இருந்தனர். இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். இலவச மின்சார சலுகையை, 1,000 யூனிட்டுகளாக உயர்த்த வேண்டும்.நெசவாளர்களுக்கு தனி வங்கி,

சூலுார் : எதிர்பார்த்திருந்த அறிவிப்புகள், மானியக் கோரிக்கையில் இடம் பெறாததால், விசைத்தறியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர், பல கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி இருந்தனர். இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். இலவச மின்சார சலுகையை, 1,000 யூனிட்டுகளாக உயர்த்த வேண்டும்.நெசவாளர்களுக்கு தனி வங்கி, கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் அனைத்தும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் வழங்க வேண்டும். விசைத்தறிக்கென தனி விற்பனை மையம் துவக்க வேண்டும்.கூட்டுறவு சங்கங்கள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவுளி சந்தை, விசைத்தறியாளர்களின், ரூ.65 கோடி மூலதன கடன் தள்ளுபடி, கூட்டுறவு விசைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.ஆனால், கைத்தறி மற்றும் துணி நுால் துறை மானிய கோரிக்கையின்போது, இதுதொடர்பான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாததால், விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில்,' விசைத்தறிக்கென எந்த சலுகை அறிவிப்புகளும் வெளியிடப்படாதது வேதனை அளிக்கிறது. 110 விதியின் கீழ் முதல்வர், ஏதேனும் சலுகைகளை அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X