பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த அன்னுார்

Added : செப் 09, 2021
Share
Advertisement
அன்னுார் : பல மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசலால், நேற்று, அன்னுார் நகரம் ஸ்தம்பித்தது.அன்னுார் நகரில், முகூர்த்த நாளும், அதற்கு முந்தைய நாளும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.இன்று முகூர்த்த நாள் என்பதால், நேற்று காலை முதல் மாலை வரை, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. கோவை ரோட்டில், அல்லிக்காரம்பாளையம் பிரிவு வரையிலும், அவிநாசி ரோட்டில் அரசு

அன்னுார் : பல மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசலால், நேற்று, அன்னுார் நகரம் ஸ்தம்பித்தது.அன்னுார் நகரில், முகூர்த்த நாளும், அதற்கு முந்தைய நாளும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இன்று முகூர்த்த நாள் என்பதால், நேற்று காலை முதல் மாலை வரை, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. கோவை ரோட்டில், அல்லிக்காரம்பாளையம் பிரிவு வரையிலும், அவிநாசி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலும் வாகனங்கள் நின்றன.மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆயிமாபுதுார் பிரிவு வரையிலும், சத்தி ரோட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் வாகனங்கள் வரிசையில் நின்றன.குறிப்பாக ஓதிமலை ரோடு, தென்னம்பாளையம் ரோடு, சத்தி ரோடு சந்திப்புகளில் வாகனங்கள் திரும்ப முடியாமல் திணறின.போதுமான போலீசார், போக்குவரத்து ஒழுங்குபடுத்த நிறுத்தப்படாததால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் சிலர் களத்தில் இறங்கி, வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர். எனினும், நெரிசலில் சிக்கி, நான்கு சக்கர வாகன ஓட்டிகள், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.தீர்வு தேவைஅன்னுார் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தென்னம்பாளையம் ரோட்டில் வாகனங்களை திரும்புவதற்கு அனுமதிக்கக் கூடாது. புறவழிச்சாலை பணிகளை விரைவில் துவக்க வேண்டும். கனரக வாகனங்களை சுற்றுப் பாதையில் செல்வதற்கு அறிவுறுத்த வேண்டும். இல்லாவிட்டால், முகூர்த்த தினங்களையொட்டி, போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X