பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் மரக்கன்றுகள் நடவு

Added : செப் 09, 2021
Share
Advertisement
உடுமலை : 'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சி பகுதிகளில், அரசுக்கு சொந்தமான நிலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகம் என கிராமப்பகுதிகளில், புங்கன், பூவரசு, நீர் மருது, வேம்பு, நாவல், சிசு, கடுக்காய், வெப்பாலை, புளி, தான்றி, வன்னி என, 1,200 மரக்கன்றுகள் நடப்பட்டது.

உடுமலை : 'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சி பகுதிகளில், அரசுக்கு சொந்தமான நிலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகம் என கிராமப்பகுதிகளில், புங்கன், பூவரசு, நீர் மருது, வேம்பு, நாவல், சிசு, கடுக்காய், வெப்பாலை, புளி, தான்றி, வன்னி என, 1,200 மரக்கன்றுகள் நடப்பட்டது. ஊராட்சித்தலைவர் முருகன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.சோழமாதேவி ஊராட்சி பகுதிகள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் குங்குமவல்லி உடனமர் குலசேகரஸ்வாமி கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், விலா, நாவல், குமிழ், வெப்பாலை, பாதாம் என, ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

ஊராட்சித்தலைவர் சாகுல் அமீது, தலைமை ஆசிரியர் சண்முகவடிவு மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், பூங்கா உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான பொது இடங்கள், கோவில் நிலங்கள், தொழிற்சாலை வளாகங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X