பொது செய்தி

தமிழ்நாடு

'கோபுர மின்விளக்கு யாருதுன்னே தெரியலையாம்' நம்மூர்லதான் இது சாத்தியம்!

Added : செப் 09, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : கூடலுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், நிறுவி பல ஆண்டுகள் ஆகியும், மின் இணைப்பு வழங்காமல் வீணாக நிற்கிறது உயர் கோபுர மின்விளக்கு. இந்த விளக்கு குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை என, கையை விரிக்கிறது பேரூராட்சி நிர்வாகம்.பெ.நா.அடுத்த, கூடலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கூ.கவுண்டம்பாளையம் செல்லும் பாதையில், விஜயலட்சுமி நகர் அருகே மூன்று ரோடுகளின்

பெ.நா.பாளையம் : கூடலுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், நிறுவி பல ஆண்டுகள் ஆகியும், மின் இணைப்பு வழங்காமல் வீணாக நிற்கிறது

உயர் கோபுர மின்விளக்கு. இந்த விளக்கு குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை என, கையை விரிக்கிறது பேரூராட்சி நிர்வாகம்.பெ.நா.அடுத்த, கூடலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கூ.கவுண்டம்பாளையம் செல்லும் பாதையில், விஜயலட்சுமி நகர் அருகே மூன்று ரோடுகளின் சந்திப்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு, உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. அமைத்ததோடு சரி. நேற்று வரை, மின் இணைப்பு வழங்கப்படாததால், யாருக்கும் பயன்படாமல், வீணாக நிற்கிறது.இதுகுறித்து, கூ.கவுண்டம்பாளையம் பொதுமக்கள் கூறியதாவது:இரவு நேரங்களில், இப்பகுதியில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை, அதிகமாக இருக்கும்.இந்த ரோட்டைக் கடந்துதான், கவுண்டம்பாளையம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

மக்களின் வசதிக்காகவே, பல லட்சம் ரூபாய் மதிப்பில், உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.நிறுவியது முதல், எரியவே இல்லை. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.தெரியாதுஇதுகுறித்து கூடலுார் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு நிறுவப்பட்டது. பொருத்தியவர்கள் யார், யாரிடம் அனுமதி பெற்றனர், எந்த துறைக்குச் சொந்தமானது என்ற எந்த விவரமும், பேரூராட்சி நிர்வாகத்திடம் இல்லை.பேரூராட்சி சார்பில், இந்த கோபுர மின்விளக்குக்காக, எவ்வித தொகையும் வழங்கப்படவில்லை.இருந்தாலும், இதுகுறித்து, உயர் அதிகாரிகளுடன் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X