அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் அ.தி.மு.க., வெளிநடப்பு

Updated : செப் 10, 2021 | Added : செப் 09, 2021 | கருத்துகள் (5+ 30)
Share
Advertisement
சென்னை : சட்டசபையில் பேச வாய்ப்பு அளிக்கப்படாததை கண்டித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி பேச வாய்ப்பு கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தார். அவர், அரசு மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறத் துவங்கினார். அவர் பேசியது, அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக, சபாநாயகர் அப்பாவு
சட்டசபையில் அ.தி.மு.க., வெளிநடப்பு

சென்னை : சட்டசபையில் பேச வாய்ப்பு அளிக்கப்படாததை கண்டித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி பேச வாய்ப்பு கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தார்.
அவர், அரசு மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறத் துவங்கினார். அவர் பேசியது, அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அவர் தொடர்ந்து பேச, அனுமதி அளிக்கவில்லை.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று, முனுசாமி பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என, வலியுறுத்தினர். சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அதைக் கண்டித்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின், பழனிசாமி கூறியதாவது:சட்டசபையில், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து, முனுசாமி பேசியபோது, சபாநாயகர் அனுமதிக்க மறுத்தார். எவ்வளவோ வற்புறுத்தியும், பேச அனுமதி தரவில்லை. பின், 1 நிமிடம் தருவதாகக் கூறினார். அப்போது முனுசாமி பேசியதை, சபை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.

நான் எழுந்து, முனுசாமி பேச வாய்ப்பு கொடுக்கும்படி வற்புறுத்தியும், வாய்ப்பு மறுக்கப்பட்டது. நான் சில கருத்துகளை தெரிவிக்க, அனுமதி கேட்டபோது, அனுமதி தரவில்லை.
ஜெயலலிதா உழைக்கும் பெண்களுக்கு, இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பிரதமர் திட்டத்தை துவக்கி வைத்தார். அந்த திட்டத்தை, இந்த அரசு கைவிட்டுவிட்டது.

ஜெயலலிதா அரசில், 24 வேளாண்மை விற்பனைக் குழுவுக்கு, தலைவர்கள், துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பாக பணியாற்றி வந்தனர். இக்குழுவை திரும்பப்பெற, சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளனர்.
ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலை உருவாக்க, கவர்னர் அனுமதி பெற்று, துணைவேந்தர் நியமிக்கப்பட்டார். அந்த பல்கலையை அண்ணாமலை பல்கலையுடன் இணைத்துள்ளனர். அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டங்களை, அவர்கள்
அனுமதிக்கவில்லை. உயர்கல்வி மன்றத்தில், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க தடை விதித்துள்ளனர். இதை சபையில் தெரிவிக்க, சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. நாங்கள் பேசியதையும், அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார். எனவே, வெளிநடப்பு செய்து
உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-செப்-202117:03:53 IST Report Abuse
Pugazh V அதிமுகவின் திட்டங்கள்: கூவத்தூர் கும்மாளம், . மண்சோறு, தீச்சட்டி, கரகாட்டம், யாகம், லட்ச ரூபாய்க்கு இட்லி - இலை தானே? அதெல்லாம் ஒதுக்கப்பட வேண்டியவை தான்.
Rate this:
Cancel
mannaru - sirumukai ,இந்தியா
09-செப்-202108:15:29 IST Report Abuse
mannaru ஆளும் கட்சியின் சொம்புகள் யார் நல்லது செய்து இருந்தாலும் மீடியாக்கள் எல்லாம் அவர்களின் கையில் அவர்கள் என்ன அவேண்டுமென்றாலும் எதிர்க்கட்சியை பற்றி எழுதுவார்கள்.ஹிந்துக்களே சாமரம் வீ சுகிறார்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-செப்-202107:00:42 IST Report Abuse
Kasimani Baskaran வெளிநடப்பு செய்தால் உள்நடப்புகள், கோமாளித்தனங்கள் தெரியாமல்போய்விடும் என்பதை இவர்கள் அறியவில்லை என்பது துரதிஷ்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X