மலை பகுதியில் கடுங்குளிர் சுற்றுலா பயணிகள் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலை பகுதியில் கடுங்குளிர் சுற்றுலா பயணிகள் தவிப்பு

Added : செப் 09, 2021
Share
வால்பாறை : வால்பாறையில் மழை பெய்யும் நிலையில், கடுங்குளிர் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.வால்பாறையில் பெய்யும் தென்மேற்கு பருவமழையால், ஆறு, அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கேரள சோலையாறில், 25 மெகாவாட் மின் உற்பத்தியும், மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில், 84 மெகாவாட் மின் உற்பத்தியும்

வால்பாறை : வால்பாறையில் மழை பெய்யும் நிலையில், கடுங்குளிர் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

வால்பாறையில் பெய்யும் தென்மேற்கு பருவமழையால், ஆறு, அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கேரள சோலையாறில், 25 மெகாவாட் மின் உற்பத்தியும், மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில், 84 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.இதனிடையே, இரு நாட்களாக காற்றுடன் மழை பெய்வதால், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடுங்குளிர் நிலவுகிறது. அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். பல்வேறு பகுதியிலிருந்தும், வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் கடுங்குளிரால் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X