தமிழ்நாடு

4 நகராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்த முடிவு! வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்கல்

Added : செப் 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம், பரமக்குடி ஆகிய நகராட்சிகளில் தற்போது காவிரி கூட்டுகுடிநீர்பொது குழாய்கள், மற்றும் வீட்டு இணைப்பு மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுக்குழாய்களை அகற்றி அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கி குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய

ராமநாதபுரம் : மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம், பரமக்குடி ஆகிய நகராட்சிகளில் தற்போது காவிரி கூட்டுகுடிநீர்பொது குழாய்கள், மற்றும் வீட்டு இணைப்பு மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுக்குழாய்களை அகற்றி அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கி குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமங்களில உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கி பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பணி நடக்கிறது.ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், கமுதி, பரமக்குடி, போகலுார், நயினார்கோவில், ஆஸ்.எஸ்.மங்கலம் ஆகிய ஒன்றியங்களில் 51 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்குட்பட்ட 159 குக்கிராமங்களில் குடியிருப்புகளுக்கு தனித்தனி குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது.

அடுத்தபடியாக ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய நகராட்சிகளில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக காவிரி கூட்டுகுடிநீர் மூலம் நேரடியாகவும், பொதுக்குழாய் மூலம் எத்தனை வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறித்து நகராட்சி பொறியியல் பிரிவினர் கணக்கெடுக்கின்றனர்.

விரைவில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் சாலைகளின் நீளம், அகலம்உள்ளிட்டவை படம் பிடிக்கப்பட உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில்பொதுக்குழாய்களை தவிர்த்து அனைவருக்கும் வீடுகள் தோறும் குடிநீர் வழங்கப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X