மூலிகை நாற்றுகள் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூலிகை நாற்றுகள் வினியோகம்

Added : செப் 09, 2021
Share
மேட்டுப்பாளையம் : தமிழ்நாடு மாநில மூலிகைத் தாவர வாரியத்தின் சார்பில், மக்களைத் தேடி மூலிகை செடிகள், இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி,காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையது அப்பாஸ் அலி, சிவகுமார் ஆகியோர் பொதுமக்களுக்கு மூலிகை நாற்றுகளை வழங்கினர்.தோலம்பாளையம் அரசு ஆயுர்வேத மருந்தக டாக்டர் மணிமேகலை, காரமடை ஆரம்ப சுகாதார நிலைய
 மூலிகை நாற்றுகள் வினியோகம்

மேட்டுப்பாளையம் : தமிழ்நாடு மாநில மூலிகைத் தாவர வாரியத்தின் சார்பில், மக்களைத் தேடி மூலிகை செடிகள், இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி,காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையது அப்பாஸ் அலி, சிவகுமார் ஆகியோர் பொதுமக்களுக்கு மூலிகை நாற்றுகளை வழங்கினர்.

தோலம்பாளையம் அரசு ஆயுர்வேத மருந்தக டாக்டர் மணிமேகலை, காரமடை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு டாக்டர் ஜெயலட்சுமி, ஓமியோபதி மருத்துவ பிரிவு டாக்டர் ஜெயஸ்ரீ மீனாட்சி ஆகியோர், மூலிகைகளின் மருத்துவ பலன், பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினர்.கரிசலாங்கண்ணி, கற்பூரவள்ளி, நிலவேம்பு, வல்லாரை, முடக்கத்தான், நித்தியகல்யாணி, இன்சுலின் செடி, பிரண்டை உள்ளிட்ட நாற்றுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், காரமடை வட்டார சத்துணவு மேலாளர் சிவக்குமார், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X