பொது செய்தி

தமிழ்நாடு

வீடு கட்ட இடம் வழங்க வலியுறுத்தி கல்லார்குடி மக்கள் போராட முடிவு

Added : செப் 09, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை, கல்லார்குடி காடர் இன மக்களுக்கு, வீடு கட்ட அனுமதி வழங்க கோரி அக். 2ம் தேதி போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.வால்பாறையில், கல்லார்குடி செட்டில்மென்ட் பழங்குடியினர் கூட்டம், செயல்பாட்டாளர் தனராஜ் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், செட்டில்மென்ட் மூப்பன் சக்திவேல், கிராமசபை தலைவர் நாராயணன், செயலாளர் ராஜலட்சுமி ஆகியோர்

வால்பாறை : வால்பாறை, கல்லார்குடி காடர் இன மக்களுக்கு, வீடு கட்ட அனுமதி வழங்க கோரி அக். 2ம் தேதி போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வால்பாறையில், கல்லார்குடி செட்டில்மென்ட் பழங்குடியினர் கூட்டம், செயல்பாட்டாளர் தனராஜ் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், செட்டில்மென்ட் மூப்பன் சக்திவேல், கிராமசபை தலைவர் நாராயணன், செயலாளர் ராஜலட்சுமி ஆகியோர் பேசியதாவது:கல்லார்குடி செட்டில்மென்ட் பகுதியில், காடர் இனத்தை சேர்ந்த பழங்குடியினர், 23 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள செட்டில்மென்ட் பகுதியில், கடந்த, 2019ம் ஆண்டு பெய்த கனமழைக்கு வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தன. இதனால், பழங்குடியின மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறோம்.இந்நிலையில், தற்காலிகமாக தங்குவதற்கு தாய்முடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வன உரிமை சட்டப்படி, மாற்று இடமான தாய்முடி தெப்பக்குள மேடு பகுதியில் வீடு கட்ட இடம் தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்., மாதம் பழங்குடியின மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், வால்பாறை தாசில்தார் தலைமையில், 15 பேர் கொண்ட குழு தெப்பக்குள மேடு பகுதியில் நிலஅளவை செய்தனர்.ஆனால், இன்று வரை கல்லார்குடி மக்களுக்கு வீடு கட்ட இடம் வழங்கவில்லை. எனவே வீடுகளை இழந்து தவிக்கும் கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில், வீடு கட்ட இடம் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி, அக்., 2ம் தேதி தெப்பக்குளம் மேடு பகுதியில் போராட்டம் நடத்துவது, என, கிராம சபை கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X