மண்டபம் பேரூராட்சி ஊழியர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண்டபம் பேரூராட்சி ஊழியர் தற்கொலை

Added : செப் 09, 2021
Share
ராமேஸ்வரம் : மண்டபம் பேரூராட்சி ஊழியர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்.மண்டபம் பேரூராட்சி துப்புரவு ஊழியரான முனியாண்டி மகன் முனியசாமி 48, மின் கம்பத்தில் விளக்குகள் பொருத்தும் பணியும் வழங்கியுள்ளனர். 10 ஆண்டுக்கு முன் மின்சாரம் தாக்கியதில், முனியசாமி நடக்க முடியாமல் போனதால் சில ஆண்டுக்கு முன் இவருக்கு வேலையும் பறிபோனது. பின் கருணை அடிப்படையில்

ராமேஸ்வரம் : மண்டபம் பேரூராட்சி ஊழியர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்.

மண்டபம் பேரூராட்சி துப்புரவு ஊழியரான முனியாண்டி மகன் முனியசாமி 48, மின் கம்பத்தில் விளக்குகள் பொருத்தும் பணியும் வழங்கியுள்ளனர். 10 ஆண்டுக்கு முன் மின்சாரம் தாக்கியதில், முனியசாமி நடக்க முடியாமல் போனதால் சில ஆண்டுக்கு முன் இவருக்கு வேலையும் பறிபோனது. பின் கருணை அடிப்படையில் பேரூராட்சிக்கு சொந்தமான கடற்கரை பூங்காவில் வாட்ச்மேனாக பணிபுரிந்தார்.

இந்நிலையில் மருத்துவம், குடும்ப செலவுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார்.கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்ததால் வேதனையடைந்த முனியசாமி பூங்காவில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மண்டபம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X