பாரம்பரிய உணவு திருவிழா விழிப்புணர்வு கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய உணவு திருவிழா விழிப்புணர்வு கண்காட்சி

Added : செப் 09, 2021
Share
உடுமலை : கர்ப்பிணிகள் மற்றும் வளர் இளம்பெண்கள் இடையே ஊட்டச்சத்து உணவுகளின் அவசியம் குறித்து, பாரம்பரிய உணவுத் திருவிழாவில் எடுத்துரைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், 'ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்' என்ற தலைப்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.உடுமலை போடிப்பட்டி அரசு பள்ளியில், பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விழிப்புணர்வு
 பாரம்பரிய உணவு திருவிழா  விழிப்புணர்வு கண்காட்சி

உடுமலை : கர்ப்பிணிகள் மற்றும் வளர் இளம்பெண்கள் இடையே ஊட்டச்சத்து உணவுகளின் அவசியம் குறித்து, பாரம்பரிய உணவுத் திருவிழாவில் எடுத்துரைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில், 'ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்' என்ற தலைப்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.உடுமலை போடிப்பட்டி அரசு பள்ளியில், பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் தலைமை வகித்தார். கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகள், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் இணை உணவில் செய்யப்பட்ட உணவு வகைகள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா, 'கர்ப்பிணிகள், வளர் இளம்பெண்கள் ரத்த சோகை இல்லாமலும், எடை குறைந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்,' குறித்து விளக்கினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. வளர் இளம்பெண்களிடையே சமையல், கொலு கொலு குழந்தைக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசும் வழங்கப்பட்டன.குடிமங்கலம் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சூர்யா, உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், போடிப்பட்டி ஊராட்சித்தலைவர் சவுந்திரராஜன், அரசு பள்ளி தலைமையாசிரியர் லதா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X