கட்டாஞ்சி மலை கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டாஞ்சி மலை கிராமத்தில் 100 சதவீதம் தடுப்பூசி

Added : செப் 09, 2021
Share
மேட்டுப்பாளையம் : கட்டாஞ்சிமலையில் உள்ள, மலைவாழ் கிராமத்தில், 100 சதவீதம் பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மருதுார் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில், 36 மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசிக்கின்றன. சிலர் காரமடை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.இவர்களால் மலைவாழ் மக்களுக்கு, கொரோனா தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மேட்டுப்பாளையம் : கட்டாஞ்சிமலையில் உள்ள, மலைவாழ் கிராமத்தில், 100 சதவீதம் பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மருதுார் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில், 36 மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசிக்கின்றன. சிலர் காரமடை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.இவர்களால் மலைவாழ் மக்களுக்கு, கொரோனா தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து மருதுார் ஊராட்சி நிர்வாகம், இம்மக்களுக்கு, தடுப்பூசி போட ஏற்பாடு செய்தது.இதுகுறித்து மருதுார் ஊராட்சித் தலைவர் பூர்ணிமா கூறியதாவது:கட்டாஞ்சிமலை, மலைவாழ் மக்களில், பெரியவர்கள், 76 பேருக்கு, மருதுார் ஊராட்சி சார்பில், காரமடை அரசு ஆரம்ப சுகாதார துறையினர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

சிறுவர்களுக்கு மட்டுமே இன்னும் தடுப்பூசி போடவில்லை. அந்த வகையில் இக்கிராமத்தில், 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், திம்மம்பாளையம், ஏழுசுலி, எம்.ஜி., புதுார் ஆகிய பகுதிகளில், இன்று (நேற்று) 370 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.ஊராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X